“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி தொகுதி… ஸ்டார் தொகுதியாக இருந்தது. இப்போதும் ஸ்டார் தொகுதியாகவே இருக்கிறது. காரணம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். கருணாநிதி போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றிபெற்ற தொகுதி. மறைந்த ஜெ.அன்பழகன் இருமுறை வென்ற தொகுதி. 1977ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 10 தேர்தல்களில் 9 தேர்களில் வென்றெடுத்த தொகுதி என திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறது சேப்பாக்கம். உதயநிதியை எதிர்த்து பாமக வேட்பாளர் கஸ்ஸாலி நிற்கிறார். முகம்மது இத்ரிஸ் (ஐஜேகே), மு ஜெயசிம்மராஜா (நாதக), எல். ராஜேந்திரன் (அமமுக) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

தொகுதி மக்களின் மனங்களை அறிய நமது டாப் தமிழ் நியூஸ் குழு களத்தில் இறங்கியது. இறங்கியதுமே தெரிந்துவிட்டது அது திமுக கோட்டை தான் என்று. சூடத்தில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொல்லுகிறார்கள் எங்கள் ஆதரவு திமுகவுக்குத் தான் என்று. அடுத்தப்படியாக அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

ஆனால் பெருவாரியான வித்தியாசத்தில் திமுகவே ஜெயிக்கும் என்பதே கருத்துக்கணிப்பில் தெரிகிறது. சின்ன தளபதியை எம்எல்ஏ ஆக்காமல் உறங்கமாட்டார்கள் போல… மூன்றாம் அணி என்ற கேள்வியைக் கேட்பதற்கு முன்னாலேயே வாய்ப்பே இல்லை என சொல்லி வாயை அடைத்துவிடுகிறார்கள். வலியுறுத்தி கேட்டால் மட்டும் சீமானை பெயரைச் சொல்கிறார்கள்.

“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், நடுத்தர வர்க்கத்தில் பணப்புழக்கம், கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை, பாஜகவுடன் கூட்டணி உள்ளிட்ட அதிருப்திகளைக் கூறி அதிமுகவை முற்றிலும் வெறுக்கின்றனர். குறிப்பாக சிஏஏவுக்கு ஆதரவாக இருந்தது தொகுதியில் அதிகமாக இருக்கும் சிறுபான்மையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.

“சின்ன தளபதிய எம்எல்ஏ ஆக்காம விட மாட்டாங்க போலயே” – ‘திமுக கோட்டை’ மக்கள்! #chepauk

ஒருவர் மட்டும் அதிமுகவை ஆதரித்து திமுக வந்தால் ரவுடிசம் இருக்கும் என்று சொன்னார். எடப்பாடி ஆட்சிக்கு அதிகபட்சமாக 8 மதிப்பெண்களும் குறைந்தபட்சமாக ஜீரோவும் கிடைத்தன. கருத்துக்கணிப்பு முடிவில் திமுகவே வெற்றிபெறும் என்று புலப்படுகிறது. முழு கருத்துகளை அறிய கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.