#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

 

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

TTNSurvey ஆளப்போவது யார்?


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு என படு பிஷியாகி மீண்டும் பிரச்சார களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே வேலை செய்யட்டும் மக்களின் மனநிலையை அறிய நாங்கள் களத்தில் குதித்திருக்கிறோம்.

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

மீண்டும் எடப்பாடி மக்கள் வாய்ப்பு கொடுப்பார்களா அல்லது நீண்ட நாட்களாக முதலமைச்சராகும் கனவோடு வேட்கையோடு செயலாற்றும் ஸ்டாலினுக்கு வாய்ப்பளிப்பார்களா அல்லது கமல்ஹாசன், சீமான், தினகரன் என மூன்றாவது அணியை விரும்புவார்களா என்ற எதிர்பார்ப்புடன் களத்திற்குச் சென்றோம். மேற்கூறிய கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் 234 தொகுதிகளிலும் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறது. 234 தொகுதிகளில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம்.

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

திருமாவளவனின் ஆஸ்தான தொகுதி

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மக்களவை தொகுதியாகவும் உள்ளது. விசிக தலைவர் திருமாவளவனின் ஆஸ்தான தொகுதி. இங்கு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். இப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கே அவருக்கென்று தனிச் செல்வாக்கு உண்டு. 1971ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவும் திமுகவும் தலா நான்கு முறை வெற்றிபெற்றிருக்கின்றன. தற்போதைய காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் தமாக சார்பில் ஒரு முறையும் வெற்றிவாகை சூடியிருக்கிறார். 2011இல் கே.பாலகிருஷ்ணன் வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த முறை அதிமுக சார்பில் கேஏ பாண்டியன் வெற்றிபெற்றார்.

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

கூட்டணிக் கட்சிகளால் உயரும் திமுகவின் பலம்

திமுகவும் அதிமுகவும் சம பலம் கொண்ட தொகுதி. அதிமுகவை காட்டிலும் திமுக லீடிங்கில் இருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளும் ஒரு காரணம். ஆம் இங்கு விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ளது. இது திமுகவிற்குக் கூடுதல் பலமாகிறது. முத்தாய்ப்பாக 2011 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி கே.பாலகிருஷ்ணன் இங்கு வெற்றிபெற்றுள்ளார். 2021 தேர்தல் களத்திலும் இது எதிரொலிக்கும் என்பதையே கருத்துக்கணிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. வாருங்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

2021 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள்:

ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி – இந்திய யுனியன் முஸ்லிம் லீக் (திமுக)

கேஏ பாண்டியன் – அதிமுக

நாம் தமிழர் – கி.நடராஜன்

அமமுக – நந்தினி தேவி

சமக – தேவசகாயம்

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

சிதம்பரம் மக்களிடம் மைக்கை நீட்டியவுடனே சட்டென்று திமுகவுக்கு தான் எங்கள் ஓட்டு என்று கூறிவிட்டார்கள். அடுத்தபடியாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிமுகவுக்கு சார்பாக மக்கள் பேசினார்கள். சீமான் சில இடங்களில் ஒலித்தார். தினகரன் பெயரை பேருக்கு கூட உச்சரிக்கவில்லை. இதன்மூலம் சிதம்பரத்திலும் திமுக vs அதிமுக என்ற இருமுனை போட்டி என்பதே உறுதியாகியிருக்கிறது. இவர்களைத் தவிர மூன்றாவதாக யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டதற்கு சீமானையும் கமலையும் மாற்றி மாற்றிச் சொன்னார்கள். ஆனால் ஒருசிலர் அவர்கள் மேல் நம்பிக்கையே இல்லை என்று நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார்கள்.

மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

கோரிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டதற்கு குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்கின்றனர். அதேபோல சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முன்வைக்கின்றனர். குடிசையாக இருக்கும் வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், மீனவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வேண்டுகோள்களும் மக்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

#chidambaram: “எடப்பாடி ஆட்சில பிச்ச தான் எடுத்தோம்”

அதிமுக ஆட்சிக்கு எத்தனை மார்க்

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அஞ்சு வருசமா பிச்ச தான் எடுத்திட்டிருக்கிறோம் என்று பட்டென்று அண்ணன் ஒருவர் கூறிவிட்டு மார்க்லாம் கொடுக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டார். அதிமுக சார்பு பகுதிகளில் கூட ஃபுல் மார்க் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக 9 மார்க்கும் குறைந்தபட்சமாக பூஜ்யமும் மக்களால் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும் போது முன்னமே கூறியது போல் அதிமுகவும் திமுகவும் சமபலத்துடன் மோதிக்கொண்டாலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியாலும் தற்போதைய அதிமுகவின் எதிர்ப்பலையும் இணைந்து இந்திய முஸ்லீம் லீக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் என்பதையே காட்டுகின்றன.