‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

 

‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கவிருக்கிறது. ஆட்சி மாற்றம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிக்கு சாதகமாக இந்த தேர்தல் இருப்பதாகவே சொல்கின்றன. இப்படியிருக்கும் சூழலில் மக்களின் ஆதரவு யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் நேரடியாக 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி ‘தென்காசி’…

‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

தொடர் வெற்றி கண்ட அதிமுக:

கடந்த 1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ரவி அருணன், 2001ல் அதிமுகவில் சார்பில் அண்ணாமலை, 2006ல் திமுக சார்பில் கருப்பசாமி பாண்டியன், 2011ல் அதிமுக சார்பில் சரத்குமார், 2016ல் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றனர். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றை பார்க்கும் போது அதிமுக 3 முறையும், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

களம் காணும் வேட்பாளர்கள்:

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் பழனி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவான செல்வ மோகன்தாஸ் போட்டியிடுகிறார். இதை தவிர நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

#TTNsurvey ஆளப்போவது யார்?

தென்காசி தொகுதியில் தற்போது அதிமுக வசம் தான் இருக்கிறது. அதன் சிட்டிங் எம்.எல்.ஏ செல்வம் மோகன்தாஸ் பாண்டியன். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அந்த தொகுதி மக்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவளிக்க போகிறார்களா? அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்களா? என்பது குறித்து நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

அதற்கு, வேலைவாய்ப்பு, சமூகத்தை உயர்த்த ஏதும் இல்லை, இலவசத்தை கொடுத்து கொடுத்து வறுமை தான் அதிகமாக இருக்கிறது அதை ஒழிக்க ஏதாவது ஒரு கட்சி வரவேண்டுமென ஒரு இளைஞர் உரக்கச் சொல்லினார். மற்றொருவர், ஊழல் அதிகமாக இருக்கிறது. பிறப்பு சான்றிதழ் பெறுவதில் கூட ஊழல் நடக்கிறது. இதை குறைக்கும் அளவுக்கு எந்த கட்சி வருகிறதோ அதுக்கு தான் என்னோட ஆதரவு என்று கூறினார்.

இதையடுத்து, பெரும்பாலானோர் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். ஒரு சிலர் ஆளும் அதிமுக அரசின் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்கள். தென்காசி தொகுதிக்கு வேலைவாய்ப்பு, அரசு கல்லூரிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டுமென்றும் அவர்கள் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல், அதிமுக அரசுக்கு மைனஸில் தான் மார்க் கொடுப்போம் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

‘இலவசம் கொடுத்தே வறுமையில தள்ளிட்டாங்க’…தென்காசி மக்கள் ஆவேசம்!

சர்வேயின் முடிவில், தென்காசி தொகுதி மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு அதிகப்படியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!