16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

 

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

சார்வரி வருடம் I தை 3 I சனிக்கிழமை I ஜனவரி 16, 2021

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். இலக்குகளை நோக்கி நகர்வீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பணி புரிபவர்கள், மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் மகிழ்ச்சியானதாக, சிறப்பானதாக இருக்கும்.

ரிஷபம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்கள் கனவு நிறைவேறும். நண்பர்கள், உடன் இருப்போர் ஆதரவு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் நல்ல செய்தி வரும்.

மிதுனம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் இலக்கை அடைய மட்டுமின்றி, அன்றாட பணியில் கூட போராட்டத்தை சந்திப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதை இன்றைக்கு மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் குழப்பம், அமைதியின்மை ஏற்படும். இயல்பாக இருப்பதன் மூலம் குடும்பத்தில் நல்லுறவு மேம்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. வீண் செலவு அதிகரிக்கும்.

கடகம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய தினம் ஏற்றம் இறக்கம் மிகுந்ததாக இருக்கும். அவநம்பிக்கை தோன்றி மறையும். வெற்றிபெற மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்னை வரலாம். எனவே எச்சரிக்கையாக பழகுங்கள். குடும்பத்தில் மோதல் போக்கு ஏற்படலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

சிம்மம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைக்கு ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு, உறுதியான செயல்பாடு காரணமாக தடைகளை வெல்வீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். துணைவருடன் பிணைப்பு அதிகரிக்கும். பண வரவு உண்டு.

கன்னி

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி நிலவும். நிதி நிலையில் சிறிது முன்னேற்றம் இருக்கும். இன்றைய தினம் உற்சாகமானதாக அமையும்.

துலாம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய தினம் மந்தமாக இருக்கும். வேலை, பணியிடத்தில் பதற்றம் நிலவும். சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண வரவு இல்லை. அதே நேரத்தில் செலவு அதிகரிக்கலாம் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

சவாலான நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்ய முடியாமல் அவதியுறுவீர்கள். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். இது வீண் குழப்பத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பண வரவு குறைவாக இருக்கும். தேவைகளை பூர்த்தி செய்வதைக் கூட கடினமாக உணர்வீர்கள்.

தனுசு

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

நன்மை மிகுந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் உங்களைத் தேடி வரும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பண வரவு உண்டு. பணத்தை சேமித்து வைக்க முயற்சி செய்வீர்கள்.

மகரம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

இன்றைய தினம் சுமாராக கழியும். முக்கிய முடிவெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடச் சூழல் சரியாக இருக்காது. உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளிடம் விரோதம் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்மான சூழல் நிலவும். வீண் செலவு அதிகரிக்கும்.

கும்பம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

உங்கள் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். வீண் பயம், பதற்றம், அமைதியின்மை ஏற்படும். இதன் காரணமாக அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் திணறுவீர்கள். வேலையில் தவறுகள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. உங்கள் பதற்றம் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

மீனம்

16-1-2021 தினப்பலன்: இந்த ராசிகளுக்கு வீண் செலவு வந்து சேரும்!

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்காது. வேலை செய்யும் இடத்தில், சக பணியாளர்கள் மத்தியில் மோதல் போக்கு அதிகரிக்கும். பணிச்சுமை உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குழப்பமான மன உணர்வு ஏற்படும். இந்த மனநிலை குடும்பத்தில் எதிரொலிப்பதன் மூலம் மகிழ்ச்சி குறையும். நிதி நிலை மோசமாக இருக்கும். வீண் செலவு ஏற்படும். இன்றைய தினத்தை திட்டமிட்டு அமைப்பதன் மூலம் பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கலாம்.