சார்வரி வருடம் I மாசி 22 I சனிக்கிழமை I மார்ச் 6, 2021
06-3-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்
மனதில் அமைதியின்மை அதிகரிக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகள் ஏற்பட்டு உயர் அதிகாரியின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். கணவன் மனைவி இடையே பதற்றமான சூழல் நிலவும். பண வரவு குறைவாக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்
வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி இடையே நம்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

மிதுனம்
நம்பிக்கையான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

கடகம்
பாதுகாப்பற்ற மன உணர்வு இருக்கும். நம்பிக்கையின்மை அதிகரிக்கும். வேலையில் சாதகமற்ற சூழல் காணப்படும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

சிம்மம்
சிக்கலான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் குழப்பங்கள் வந்து செல்லும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்னை அதிகரிக்கும். நிதி இழப்புக்கான வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

கன்னி
இன்று சாதகமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை, மன உறுதி அதிகரிக்கும். வேலையை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

துலாம்
சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். மனக் குழப்பம் காரணமாக குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். ஓரளவுக்கு பண வரவு இருக்கும். ஆனால், அது போதுமானதாக இருக்காது.

விருச்சிகம்
ஏற்ற இறக்கம் இல்லாத சம நாளாக இருக்கும். பொழுது போக்கில் நேரத்தை செலவிடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கோபமான சூழல் நிலவும். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய செலவு செய்வீர்கள்.

தனுசு
சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். நாள் முழுக்க பல தடைகள் வந்து மறையும். இதன் காரணமாக வேலையில் கவனக் குறைவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே அமைதி நிலவ விட்டுக்கொடுப்பது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மகரம்
சுமுகமான நாளாக காணப்படும். பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பண வரவு போதுமான அளவில் இருக்கும். அது மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

கும்பம்
செழிப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மீனம்
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைவாக முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். செலவுக்கு ஏற்ப பண வரவு இருக்கும்.