Home ஆன்மிகம் 31-3-2021 தினப்பலன் - பண வரவு திருப்திகரமாக இருக்கும் நாள் இன்று!

31-3-2021 தினப்பலன் – பண வரவு திருப்திகரமாக இருக்கும் நாள் இன்று!

சார்வரி வருடம் I பங்குனி 18 I புதன்கிழமை I மார்ச் 31, 2021

31-3-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். வேலை, தொழிலில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றிபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலையில் சவால் அதிகரிக்கும். இதன் காரணமாக சின்ன சின்ன தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். சுமாரான பண வரவு இருக்கும். செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

வெற்றிகரமான தினமாக இருக்கும். வெற்றி பெற நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். சில கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வரவு இருந்தாலும் பணப் பற்றாக்குறை நிலவும்.

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். பொறுமையாக, திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். வெற்றி பெற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வரவும் செலவும் சேர்ந்தது போல் காணப்படும்.

சிம்மம்

அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலையில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் உழைப்பு சிறப்பாக வெளிப்படும்.  கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரிக்கும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்பு உள்ளது. செலவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

துலாம்

இன்றைய நாள் சாதகமாகவோ, சுமாராகவோ, பாதகமாக மாறுவதோ உங்கள் கைகளில்தான் உள்ளது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு அதிகரித்தால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்

எதிர்பார்ப்பு அதிகரிக்கும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல் ஏற்படலாம். பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் அதீத கவனம் தேவை.

தனுசு

அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிதி நிலை சாதகமாக இருக்கும்.

மகரம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் இருக்கும்.  கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை எதிர்பார்த்ததை விட அதிக சாதகமாக அமையலாம்.

கும்பம்

இன்றைய தினம் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். மன அமைதி குறையும். வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்

மீனம்

இன்றைய தினம் சாதகமான நாளாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனத் தெளிவு பெறுவீர்கள். வேலையில் சாதகமான போக்கு நிலவும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பை அதிகரிக்க முயற்சிப்பது நல்லது.

toptamilnews.com

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews