30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

 

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

சார்வரி வருடம் I தை 17 I சனிக்கிழமை I ஜனவரி 30 2021

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

இன்றைய ராசி பலன்!

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

மேஷம்

சிக்கலான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனம் பயம், பதற்றத்தால் அவதியுறும். மனதை அமைதிப்படுத்த இறைவழிபாடு. தியானத்தில் ஈடுபடுவது நல்லது. அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் திணறலாம். வேலை பளு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும். பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

ரிஷபம்

நிதானமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. பதற்றமான உணர்வு ஏற்படும். மனதில் தைரியத்தை கொண்டு வருவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை பளு அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே அமைதி குலைவு ஏற்படும். பண வரவு இல்லை. செலவும் அதிகரிக்கும். மனக் கவலை ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்துக்காக பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

கடகம்

ஓரளவுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப்போடுங்கள். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அனுசரித்து நடந்துகொண்டால் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி ஏற்படும். பண வரவு ஓரளவுக்கு உள்ளது. செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

சிம்மம்

சுமாரான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதை தியானம், இறைவழிபாடு போன்றவற்றில் திருப்புவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூடுதல் வேலை, பொறுப்பு உங்களைத் தேடி வரும். வேலையில் கவனச் சிதறல் அதிகரிக்கும். குடும்பத்தில் அதிருப்தி மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். நிதி நிலை சுமுகமாக இல்லை.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

கன்னி

பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டிய நாள் இன்று. மனதில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலையில் மனக் குழப்பத்துடன் ஈடுபடுவீர்கள். இதனால் சின்ன சின்ன தவறுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைப்பதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

துலாம்

இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டு குறித்த நேரத்துக்கு முன்னதாகவே முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவு இருக்கும். அதை ஆக்கப்பூர்வமாக செலவு செய்வீர்கள்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

விருச்சிகம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் காணப்படும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் – மனைவி இடையே சுமுகமான உறவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. செலவு அதிகரிக்கலாம். சேமித்து வைப்பது நல்லது.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

தனுசு

சுமாரான நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் ஏமாற்றம் மிஞ்சும். உறவினர்கள், நண்பர்கள் உதவுவதாகக் கூறி கடைசி நேரத்தில் பின் வாங்குவார்கள். வேலை பளு அதிகரிக்கும். ஆனாலும் உரிய அங்கீகாரம் மரியாதை கிடைக்காமல் மன வருத்தம் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு, சண்டை ஏற்படலாம். சந்தோஷமாக பேசும்போதும் கூட வார்த்தையில் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

மகரம்

வெறுப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்வதும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் நல்லது. சுற்றிலும் நட்பு, உறவு என்று பலரும் இருந்தாலும் தனிமையை உணர்வீர்கள். வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

கும்பம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் வழியில் ஆதாயம் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வேலையில் ஆற்றலுடன் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் வரவு காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு நிறைய வாய்ப்புள்ளது. செலவும் அதிகரிக்கும்.

30-1-2021 தினப்பலன் – 5 ராசிக்கும் இன்று சுமாரான நாள் தான்!

மீனம்

வெற்றிகரமான நாளாக இன்றைய நாள் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பலன்கள் வந்து சேரும். வேலையில் வெற்றிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவரின் நன்மதிப்பை பெற முயற்சி செய்வீர்கள். பணப் புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம், மரியாதை கிடைக்கும்.