25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

 

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 11 I செவ்வாய்கிழமை I மே 25, 2021

இன்றைய ராசி பலன்!

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

மேஷம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் இன்றைய நாளை உங்கள் வசப்படுத்த முடியும். உங்களுக்கான வேலையை சிறப்புடன் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் மேம்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

ரிஷபம்

சுமாரான நாளாக இருக்கும். சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது. உங்களுக்கான வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் எழலாம். வீண் செலவு ஏற்படும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

மிதுனம்

சாதகமான நாளாக இருக்காது. எனவே, இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மனதில் வீண் பயம், பதற்றம் ஏற்படும். வேலையில் தொல்லைகளை சந்திக்க நேரிடும். கணவன் மனைவி இடையே தகவல் பரிமாற்றத்தில் தடைகள் ஏற்படும். இதனால் வீண் பிரச்னைகள் எழலாம். மனம் விட்டு பேசுவது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பணப் பற்றாக்குறை இருக்கும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

கடகம்

மந்தமான நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ஆன்மிகம், பொழுதுபோக்கு போன்றவற்றில் நேரத்தை செலவிடுவது மனதுக்கு அமைதியைத் தரும். வேலையில் சவாலான சூழல் இருக்கும். குடும்பத்தில் சுமுக உறவு இருக்காது. தனிமையில் இருப்பது போன்ற உணர்வு வரும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

சிம்மம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே அமைதியான சூழல் காணப்படும். புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கிறது. பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

கன்னி

மந்தமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உறவு பாதிக்கப்படலாம். ஈகோவை விட்டு சகஜமாக பழக முயற்சி செய்யுங்கள். தேவைகள் அதிகரிக்கும். அதனால் செலவும் அதிகரிக்கும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

துலாம்

சுமாரான நாளாக இருக்கும். கடின முயற்சிக்குப் பிறகே வெற்றி பெறும் நிலை இருக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்காது. கூடுதல் பொறுப்புகள் காரணமாக வழக்கமான பணியைக் கூட முடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை சுமாராக இருக்கும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

விருச்சிகம்

ஒன்று ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். இருப்பினும் இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வேலையில் தடங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு நிலவும். மோதல் போக்கைத் தவிர்த்தால் அமைதியான நாளாக இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கா, பண இழப்புக்கு வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

தனுசு

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று இறங்கும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான போக்கு நிலவும். அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

மகரம்

திறமையை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். இதன் காரணமாக வெற்றிகளைக் காண்பீர்கள். கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல ;இருக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

கும்பம்

சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். நிதானத்தைக் கைவிடாமல் இருப்பது நல்லது. வேலையில் போராட்டமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் இதமான சூழல் இருக்காது. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். எனவே, வார்த்தையில் கவனம் தேவை. நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு ஏற்படும்.

25-5-2021 தினப்பலன் – 4 ராசிகளுக்கு பணப்புழக்கம் இருக்கும்!

மீனம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் இறங்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். வேலையில் திருப்பதியான மனநிலை இருக்கும். குடும்பத்தில் அன்பு, அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு மேம்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

toptamilnews.com