25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

 

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 12 I திங்கட் கிழமை I ஜனவரி 25, 2021

இன்றைய ராசி பலன்!

மேஷம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்று சுமாரான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைப்பது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெறுப்பு, கோபம் போன்றவற்றுக்கு இடம் கொடுக்காமலிருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவைக் கட்டுப்படுத்த திட்டமிடுவது நல்லது.

ரிஷபம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் வெற்றி பெறலாம். எந்த ஒரு முடிவெடுத்து செயல்பாட்டாலும் அதில் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும். மனதில் தைரியம் அதிகரிக்கும். அதனால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி முறையில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

சாதகமான நாளாக இருக்காது. வீண் கவலைக்கு இடம் கொடுக்காமல் மனதை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வேலையில் சின்ன சின்ன தவறுகள் நடக்கலாம். கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியம். குடும்பத்தில் அன்பாகப் பேசுங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. பண வரவு இல்லை. அதே நேரத்தில் செலவுக்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ஆக்கப்பூர்வ நாளாக இன்றைய தினம் இருக்கும். மகிழ்ச்சி, உற்சாக மிகுதியில் இருப்பீர்கள். செய்யும் காரியங்கள் வெற்றிபெறும் அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். துணைவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வருவாய் திருப்திகரமாக இருக்கும். சம்பாதித்ததைத் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம்.

சிம்மம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். உடன் பணி செய்பவர்களால் நன்மைகள் உண்டாகும். திட்டமிட்டபடி பணியை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை மகிழ்ச்சியானதாக அமையும். திருப்தியான மனநிலை காரணமாக நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

கன்னி

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மனதில் கவலை அதிகரிக்கும். பொழுதுபோக்கு, ஆன்மிகத்தில் ஈடுபடுவதன் மூலம் கவலையை போக்கலாம். பணியில் கவனம் தேவை. வேலையில் சில தவறுகள் ஏற்படலாம். எனவே திட்டமிட்டு கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்காது. நிதி வரவு இருக்காது. செலவு அதிகரிக்கலாம். திடீர் பயணம் ஏற்படலாம்.

துலாம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக அமையும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடின உழைப்பு மேற்கொண்டால் நல்ல பலன்கள் கைமேல் கிடைக்கும். இன்றைய தினம் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். ஓய்வின்றி உழைப்பது போன்று உணர்வு இருக்கும். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்காது. செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாளை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். பண வரத்து சீராக இருக்கும். வருவாயைப் பெருக்கும் வாய்ப்புகளைப் பற்றி இன்று திட்டமிடலாம்.

தனுசு

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். காரியங்கள் வெற்றி பெறும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். சேமிப்பு உயரலாம்.

மகரம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

மனதில் கவலை அதிகரிக்கும். பொறுமையை கடைப்பிடித்தால் இன்றைய தினம் சுமுகமாகக் கடக்கும். பணியில் கவனம் தேவை. கவனச் சிதறல் பிரச்னையால் அவதியுறுவீர்கள். கணவன்  மனைவி இடையே அனுசரணை அதிகரிக்கும். சூடான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்காது. இன்றைய நாள் தேவைக்கு ஏற்ற பணம் இருக்கும்.

கும்பம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

இன்றைய தினம் கவனமாக இருந்தால் வெற்றி பெற முடியும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். உடன் பணி புரிபவர்களால் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன் மனைவி இடையே நல்றுறவு பாதிக்கப்படும். கவனக் குறைவு காரணமாக பண இழப்பு நிகழலாம். எனவே, இன்று அதிக கவனமாக ஒவ்வொரு காரியத்தையும் செய்வது நல்லது.

மீனம்

25-1-2021 தினப்பலன் – செலவு அதிகரிக்கும் நாளாக இருக்கும்!

துடிப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்தலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் மரியாதை கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவு மேம்படும். சேமிப்பு அதிகரிக்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.