23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

 

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 10 I சனிக்கிழமை I ஜனவரி 23, 2021

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மேஷ ராசி அன்பர்களே, இன்றைய தினம் மிதமான நாளாக அமையும். மகிழ்ச்சியற்ற, பாதுகாப்பற்ற மனநிலை ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். குழப்பமான மனநிலை காரணமாக வேலையில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். கையில் நிறையப் பணம் இருந்தாலும் வீண் செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

ரிஷப ராசி அன்பர்களே, நிதானமாக செயல்பட வேண்டிய தினம் இன்று. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும். வேலையில் மனம் ஈடுபடாது. இதனால் பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

மிதுனம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

மிதுன ராசி அன்பர்களே, உங்கள் வளர்ச்சியில் தடைகள் வந்து அகலும். இன்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலை, தொழில் உற்சாகமாக இருக்காது. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கணவன் மனைவி இடையே எரிச்சல் போக்கு ஏற்படும். பண வரவு குறைவாக இருக்கும். பணத்தைச் செலவு செய்யும்போது கவனம் தேவை.

கடகம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

கடக ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் வெற்றிகரமானதாக அமையும். பணியில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு மகிழ்ச்சியானதாக அமையும்.

சிம்மம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

சிம்ம ராசி அன்பர்களே, இன்றைய தினம் துடிப்புடன் கழியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை விரைந்து செய்து முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். பண வரவு இருக்கும். அதை சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

தைரியம் அதிகரிக்கும் நாளாக இன்றைய தினம் இருக்கும். வீண் கவலைகள், பாதுகாப்பற்ற உணர்வுகளைத் தவிர்த்து முன்னேறி செல்ல வேண்டும். என்னதான் தடைகள் வந்தாலும் எடுத்த காரியத்தை உறுதியுடன் முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்கள் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். செலவே அதிகமாக இருக்கும்.

துலாம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

பொறுமையாக இருக்க வேண்டிய தினம் இன்று. திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறலாம். வேலை, தொழில் உங்களுக்கு சாதகமானதாக அமையும். துணைவருடன் மோதல் ஏற்படலாம். தேவையற்ற செலவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை துடிப்புடன் நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்நியோன்யம் அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்தலாம்.

தனுசு

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய தினம் மறக்க முடியாத இனிமையான நாளாக அமையும். திட்டமிட்டு செயல்படும்போது வெற்றி மேல் வெற்றி வரும். பணியிடத்தில் இணக்கமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். பண வரவு அதிகம் உள்ளது. செலவு செய்வதில் கவனமாக இருக்கவும்.

மகரம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

தன்னம்பிக்கை மிக்க நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலை பளு அதிகரித்தாலும், அனைத்தையும் அனுசரித்து முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும்.

கும்பம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இன்றைய தினம் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். அதனால் அனைத்தையும் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பண வரவு குறைவாக இருக்கும்.

மீனம்

23-1-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். என்றாலும் முக்கிய முடிவுகளை எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது. வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கணவன் – மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும், மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.