16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

 

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

பிலவ வருடம் I வைகாசி 2 I ஞாயிற்றுக்கிழமை I மே 16, 2021

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

16-05-2021 இன்றைய ராசி பலன்!

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மேஷம்

சுமாரான நாளாக இருக்கும். இன்றைய நாள் சில தடங்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். செய்யும் செயலில் தவறுகள் நேரலாம். மனதில் பல்வேறு விதமான உணர்ச்சிகள் தோற்றும். இதனால் மனதில் அமைதியின்மை ஏற்படும். மனதில் ஏற்படும் அதீத உணர்ச்சிகள், அமைதியின்மையை குடும்பத்தினரிடம் காட்டாமல் இருப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். செலவு அதிகரிக்கும்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

ரிஷபம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். பல்வேறு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். எடுத்த காரியத்தைத் தன்னம்பிக்கையுடன் முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். கணவன் மனைவி இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மிதுனம்

சந்திக்கும் பிரச்னைகள், சவால்களை எப்படி எடுத்துக்கொள்கின்றீர்கள் என்பதைப் பொருத்து இந்த நாள் சிறப்பானதாக அல்லது சொதப்பலானதாக அமையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இன்றைய நாள் நல்லபடியாக அமையும். கவனக் குறைவு அதிகரிக்கும். இதனால் செய்யும் காரியங்களில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கடகம்

மனப் பதற்றம் மிக்க நாளாக இருக்கும். பொழுது போக்கு, ஆன்மிகம், பக்தி முயற்சியில் இறங்குவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மற்றவர்களுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இது கணவன் மனைவி இடையே புரிதலை ஏற்படுத்தும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்றைய தினம் எடுக்க வேண்டாம்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

சிம்மம்

உற்சாகமான நாளாக இருக்கும். வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். எதை முதலில் செய்வது என்று முன்னுரிமை கொடுத்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இறுமாப்பைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவும் உண்டு. குடும்பத் தேவைக்காகச் செலவு செய்வீர்கள்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். கையிருப்பு போதுமானதாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

துலாம்

சிறப்பான நாளாக இருக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சிறப்பான பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிட்டும். திட்டமிட்டு செயல்படுவதது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அனைவருடனும் சிரித்துப் பேசி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக உள்ளது. பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

தனுசு

பொறுமை சோதிக்கப்படும். நிதானமாக இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மனதில் கவலை, கவனச் சிதறல் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவ வார்த்தையில் கவனம் தேவை. கருத்துவேறுபாடு ஏற்பட்டால் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதியைத் தக்க வைக்கலாம். செலவு அதிகரிக்கும்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மகரம்

சிறப்பான நாளாக, விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். திருப்தியான மனநிலை காணப்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைக்காக செலவு செய்வீர்கள்.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

கும்பம்

வெற்றிகரமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான போக்கு இருக்கும். அனைவரையும் மகிழ்வித்து மகிழ்வீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்புள்ளது.

16-5-2021 தினப்பலன் – உற்சாகமான நாளாக இருக்கும்!

மீனம்

அதிர்ஷ்டம் குறைந்த நாளாக இருக்கும். வருவதை எதிர்கொள்ள மனதை தயார்ப்படுத்தி வைப்பது நல்லது. கவனக் குறைவு காரணமாக செய்யும் காரியத்தில் தவறுகள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பணப் புழக்கம் இருக்காது. நிதி விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.