13-6-2021 – ஞாயிறு ராசி பலன்!

 

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

பிலவ வருடம் I வைகாசி 30 I ஞாயிற்றுக்கிழமை I ஜூன் 13, 2021

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

இன்றைய ராசிபலன்

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

மேஷம்

இன்று சாதகமான நாளாக இருக்காது.  மனதில் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் மனதை செலுத்துவது நல்லது. வேலை தொழில் சாதகமான சூழல் இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

ரிஷபம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். தனித்திறமை வெளிப்படும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் நிலவும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. பயனுள்ள வகையில் செலவுகள் செய்வீர்கள்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

மிதுனம்

ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் மன அமைதி குறையும். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுக்கொடுப்பது நல்லது. பண வரவுக்கு சிறிதளவுக்கு வாய்ப்புள்ளது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

கடகம்

பதற்றமான நாளாக இருக்கும். மனதை ஆன்மிக காரியங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இன்றைய நாளில் அமைதியைக் காணலாம். வேலைப் பளு அதிகரிக்கும். அதீத பதற்றம் காரணமாக வேலையில் தவறுகள் நேரலாம். குடும்பத்தில் அமைதியற்ற சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

சிம்மம்

சுமாரான நாளாக இருக்கும். மனதில் கவலை அதிகரிக்கும். வேலையில் இறுக்கமான சூழல் காணப்படும். இருப்பினும் வேலையில் தொய்வு இருக்காது. நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். மகிழ்ச்சியைத் தக்க வைக்க அமைதியாக இருப்பது நல்லது. பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

கன்னி

அனுகூலமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளைப் பெறலாம். வேலையில் உற்சாகமான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

துலாம்

ஆற்றல் மிகுந்த நாளாக காணப்படும். எதிர்பாராத வெற்றிகள் கிட்டும். வேலையில் சலிப்பான சூழல் நிலவும். இதனால் வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத சூழல் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

விருச்சிகம்

சவாலான நாளாக இருக்கும். சூழ்நிலையைப் புரிந்து செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். பணிச்சூழல் கடினமானதாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதலை பராமரிப்பது நல்லது. நிதி நிலை சாதகமாக இருக்காது. பண இழப்புக்கு வாய்ப்புள்ளது.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

தனுசு

ஓரளவுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்க வேண்டாம். வேலையில் தடுமாற்றம் காணப்படும். தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். சாதாரணமாக பேசினாலும் கூட சண்டையில் முடியலாம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

மகரம்

அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். இறங்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். வேலை காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். உயர் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

கும்பம்

நற்பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சாதகமான சூழல் இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே திருப்திகரமான உறவு நிலை நீடிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

13-6-2021  – ஞாயிறு ராசி பலன்!

மீனம்

சுமாரான நாளாக இருக்கும். இன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கூடுதல் கவனம் தேவை. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. வேலையை முடிக்கத் திணறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே வீண் சண்டை சச்சரவு ஏற்படலாம். பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.