13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

 

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மாசி 1 I சனிக்கிழமை I பிப்ரவரி 13, 2021

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம்

சாதகமான தினமாக இன்றைய நாள் இருக்கும். வளர்ச்சியைக் காண்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பது சரியாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

ரிஷபம்

இன்றைய தினம் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமானதாக இருக்காது. வேலை பளு அதிகரிக்கும். புதிய பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். புதிய வேலை வாய்ப்பும் கூட உங்களை நாடி வரலாம். உறுதியான மனத்தோடு அதை எதிர்கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். குடும்பத்துடன் வெளியே சென்று வருவீர்கள். மன திருப்தி அதிகரிக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றமான சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கவலைகள் அவ்வப்போது வந்து சென்றாலும் நாள் முழுக்க மகிழ்ச்சி இருக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. செலவு கட்டுக்குள் இருக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

கடகம்

கவனக் குறைவு இன்றைய நாளில் பிரச்னையாக மாறலாம். மனக் குழப்பம் அதிகரிக்கும். இதனால் வேலை, தொழிலில் சிறு சிறு தவறுகள் நேரிடலாம். மனதை அமைதிப்படுத்த இசையைக் கேட்பது, தியானம் செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதம் எழலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண விஷயத்தில் கவனம் தேவை.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

சிம்மம்

துணிச்சலுடன் இன்றைய நாளை எதிர்கொள்வீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். அதீத ஆர்வக் கோளாறு காரணமாக தடித்த வார்த்தைகள் வரலாம்… எனவே, பேச்சில் இன்று கூடுதல் கவனம் தேவை. பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் செலவும் அதிகரிக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

கன்னி

இன்றைய தினம் சாதகமாகவும் சவால் மிக்கதாகவும் இருக்கும். சவாலை சமாளிக்க திட்டமிட்டு காரியத்தில் இறங்குவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். என்னதான் கூடுதலாக வேலைகள் வந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் அனைத்தையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பண வரவு சிறப்பாக உள்ளது. அதை விட செலவு அதிகமாக இருக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

துலாம்

மனதில் பயம் பதற்றம் அதிகரிக்கும். இதன் காரணமாக எந்த ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பும் குழப்பமான மனநிலை ஏற்படும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை, தொழில் சாதகமாக இருக்கும். சக பணியாளர்கள், தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். அன்புடன் நடந்து கொண்டால் பிரச்னை தவிர்க்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பணம் வந்தாலும் செலவு அதிகரிக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

மகிழ்ச்சியான நாளாக இன்றைய தினம் இருக்கும். இன்றைய தினம் மகிழ்ச்சியாக இருக்க நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை, தொழிலில் புதிய முயற்சிகளில் இறங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். கணவன் மனைவி இடையே அதிருப்தி ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்காது. வீண் செலவு அதிகரிக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

தனுசு

சிறப்பான தினமாக இன்றைய நாள் இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியைத் தரும். வேலையில் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சின்ன சின்ன சண்டையும் வந்து மறையும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

மகரம்

இன்று முன்னேற்றத்துக்கான நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். அதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்கள், தொழிலாளர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் வேலை சீராக நடக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக முன்னேற்றமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

கும்பம்

இன்றைய தினம் அதிர்ஷ்டமானதாக இருக்காது. வீண் கவலைகள் ஏற்பட்டு மனதைத் தொந்தரவு செய்யும். திடீர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். வேலையில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு பாதிக்கப்படும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. கடன் வாங்க நேரிடும்.

13-2-2021 தினப்பலன்: ஐந்து ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும்!

மீனம்

இன்றைய தினம் சாதகமானதாக இல்லை. எனவே, முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்க வேண்டாம். வேலை, தொழிலில் பாதிப்புகள் ஏற்படும். குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்கலாம். நிதி நிலை சாதகமாக இல்லை. பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் வீண் பண இழப்பு ஏற்படலாம்.