13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

 

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

சார்வரி வருடம் I மார்கழி 29 I புதன் கிழமை I ஜனவரி 13, 2021

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

இன்றைய ராசி பலன்!

மேஷம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

வளமான நாளாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியில் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

பரபரப்பான நாளாக இன்றைய தினம் அமையும். அதீத பரபரப்பு காரணமாக வேலையில், முடிவெடுப்பதில் தவறுகள் நிழலாம். எனவே, பொறுமையுடனும் கவனத்துடனும் இன்றைய நாளை அணுக வேண்டும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளுடன் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதானத்தைக் கைவிட வேண்டாம். பண வரவு இல்லை என்றாலும் வீண் செலவும் இல்லை.

மிதுனம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

ஓரளவுக்கு சாதகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். பணியில் சிறு சிறு தவறுகள் நேரலாம். எனவே, கவனத்துடன் பணியில் ஈடுபடும்போது அதைத் தவிர்க்க முடியும். துணைவருடன் உணர்வுப் பூர்வமாக நடந்துகொள்வீர்கள். வீண் உணர்ச்சிவசப்படுதலை தவிர்த்துவிடுங்கள். வீண் செலவு அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

நம்பிக்கையான நாளாக இன்றைய தினம் இருக்கும். மன உறுதியும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். உடல் மற்றும் மனதளவில் புத்துணர்வை உணர்வீர்கள். வேலையில் வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும் என்பதால் முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

சிம்மம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமையும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வேலை, தொழில் சிறப்பாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் நல்லுறவு ஏற்படும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவில் கவனம் தேவை.

கன்னி

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

உற்சாகம் சற்று குறைந்து காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் வீண் வருத்தங்களைத் தவிர்க்கலாம். வேலையில் கூடுதல் பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி கிட்டும். உங்கள் கருத்துக்களைத் துணைவரிடம் திணிக்க முயல வேண்டாம். நிதி நிலை சரியாக இருக்காது. செலவு அதிகரிக்கலாம்.

துலாம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

முன்னேற்றம் காணும் நாளாக அமையும். உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சிகள் நடக்கும். பொறுமையாகக் கையாண்டால் வெற்றி பெறலாம். சக பணியாளர்களுடன் சண்டை வரலாம். பொறுமையாக இருந்து நல்லுறவைப் பேணுவது நல்லது. துணைவரின் எண்ணம் புரிந்து நடந்துகொள்ளுங்கள். பணப்புழக்கம் இருக்காது. செலவு கூடுதலாக இருக்கும்.

விருச்சிகம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

இன்று வெற்றிகரமான நாளாக அமையும். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பண வரவு இருக்கும். இன்று உங்களுக்கு சிறப்பான ஆரோக்கியமான நாளாக அமையும்.

தனுசு

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

சோதனை நிறைந்த நாளாக இருக்கும். வெற்றிபெற கொஞ்சம் காத்திருக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும். துணைவருடன் சண்டை சச்சரவு ஏற்படலாம். இதன் காரணமாக குடும்ப உறவு பாதிக்கப்படலாம். கவனம் தேவை. சேமிப்புக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. செலவு நீண்டுகொண்டே செல்லும். மன அமைதியின்றி இருப்பீர்கள். தியானம், யோகா, கடவுள் வழிபாட்டில் மனதை செலுத்தி அமைதி அடையுங்கள்.

மகரம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். வேலையில் சிறு சிறு தடைகள் வந்தாலும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். உற்சாகம், உணர்ச்சிப் பெருக்கு காரணமாக துணைவருடன் நெருக்கம் அதிகரிக்க முயல்வீர்கள். அதுவே பிரச்னையாக மாறலாம். பண வருவாய் குறைவாக இருக்கும். செலவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.

கும்பம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

சவாலான நாளாக அமையும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் விரும்பத்தகாத சூழல் ஏற்படும். விழிப்புடனும் திறமையுடனும் அதை எதிர்கொள்ளுங்கள். இன்றைய பொழுதை அமைதியாக கழிப்பதன் மூலம் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் வருவதைத் தவிர்க்கலாம். செலவு அதிகரிக்கும் என்பதால் கவலை மேலோங்கும்.

மீனம்

13-1-2021 தினப்பலன்: இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு வீண் செலவு ஏற்படும்!

மிகவும் சிறப்பான நாளாக இன்றைய நாள் அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் மதிப்பு உயரும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் இனிமையான பொழுது அமையும். பண வரவு இருக்கும். பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க வழிகாண்பீர்கள். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும்.