11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

 

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 29 I வியாழக் கிழமை I பிப்ரவரி 11, 2021

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் புத்துணர்வு பிறக்கும். சுறுசுறுப்புடன் வேலையை செய்வீர்கள். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

ரிஷபம்

மகிழ்ச்சி குறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் மன வருத்தம் ஏற்படலாம். வேலையில் கவனக் குறைவு ஏற்படலாம். இதனால் சிறு தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி குறையும். வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலம் கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மிதுனம்

அமைதியான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதை அமைதிப்படுத்தி வேலையில் ஈடுபடுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவும். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். திடீர் பயணம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கடகம்

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சி செய்தால் வெற்றி பெறுவீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

சிம்மம்

இன்று சுமாரான நாளாகவே இருக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். மனம் அமைதியின்றி இருக்கும். மனதை அமைதிப்படுத்த ஓய்வு, பொழுதுபோக்கில் ஈடுபடலாம். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயலாற்றாவிட்டால் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பண வரவுக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. எதிர்பாராத பண இழப்பு ஏற்படலாம்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கன்னி

மன உணர்ச்சி அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். விவேகமாக நடந்துகொள்வது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை பளு அதிகரிக்கும். கவனத்துடன் பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையும். பண வரவுக்கும் செலவுக்கும் வாய்ப்புள்ளது. நிதி விஷயத்தில் இன்று கூடுதல் கவனம் தேவை.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

துலாம்

மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை குறையும் நாளாக இருக்கும். மனதில் நேர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொண்டால் இன்றைய நாளை வெற்றிகரமாக மாற்றலாம். வேலை பளு அதிகரிக்கும். மனக் குழப்பம் காரணமாக சின்ன சின்ன தவறுகள் நேர வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, வாக்குவாதம் எழலாம். பண வரவுக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அது போதுமானதாக இருக்காது. நிதி விஷயத்தில் இன்று கவனமாக இருப்பது நல்லது.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

சிறப்பான நாளாக இன்றைய தினம் இருக்கும். மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுக்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பு உயரும்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

தனுசு

பொறுமையுடன் இருப்பதன் மூலம் இன்றைய நாளை இனிய நாளாக மாற்றலாம். மனதில் உணர்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் வழியில் பிரச்னைகள், மன வருத்தங்கள் வந்து சேரும். திட்டமிட்டு காரியத்தில் இறங்கி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் வருத்தமான சூழல் நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. கடன் வாங்கி சமாளிக்கலாம் என்றாலும் கடன் கிடைக்காமல் அவதியுறுவீர்கள். எனவே, வீண் முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மகரம்

மனக் குழப்பம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனதில் குழப்பம் காரணமாக குடும்பத்தில் அமைதியின்மை நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் குறையும். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. பண இழப்புக்கான வாய்ப்பு அதிகம். இதுவும் உங்கள் கவலையை அதிகரிக்கச் செய்யும்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

கும்பம்

அதிர்ஷ்டம் குறைந்த நாளாக இன்றைய தினம் இருக்கும். என்னதான் முயன்றாலும் இன்றைய தினத்தில் கடைசியில் வெற்றியை இழக்கும் சூழல் எழலாம். எனவே, இன்றைய தினத்தில் முக்கிய காரியங்கள், முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை பளு அதிகரிக்கும். வேலையில் தவறுகளும் அதிகரிக்கும். உள்ளத்தில் உணர்ச்சிப் பெருக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு பராமரிக்க முடியாமல் திணறுவீர்கள். நிதி நிலை சாதகமாக இல்லை. செலவு அதிகரிக்கும்.

11-2-2021 தினப்பலன்: 6 ராசிகளுக்கு சோதனையான நாளாக இருக்கும்!

மீனம்

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். முக்கிய முடிவுகளை இன்றைய தினத்தில் எடுப்பது சிறப்பாக இருக்கும். வேலை பளு குறைந்து காணப்படும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு காரணமாக எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.