11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

 

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I மார்கழி 27 I திங்கட்கிழமை I ஜனவரி 11, 2021

திதி : 02:32 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : கேட்டை 09:09 AM வரை பிறகு மூலம்

யோகம் : வ்ருத்தி 08:40 AM வரை, அதன் பின் துருவம் 05:38 AM வரை, அதன் பின் வியாகாதம்

கரணம் : வனசை 02:32 PM வரை பிறகு பத்திரை 01:26 AM வரை பிறகு சகுனி.

இன்றைய ராசி பலன்!

மேஷம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

அதிக பொறுப்புகளை இன்று நீங்கள் கையாள வேண்டியிருக்கும். அதற்கு ஏற்ப  நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதீத உற்சாக காரணமாக பணியில் சிறு தவறுகள் ஏற்படலாம். எனவே, கவனம் தேவை. உற்சாக மிகுதியில் வெளிப்படும் வார்த்தைகள் துணைவரைக் காயப்படுத்தலாம். மற்ற குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. வீண் செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

அனுகூலமான தினமாக இன்றைய நாள் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் அதிகரித்தாலும் திருப்திகரமானதாக இருக்கும். இன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பீர்கள்.

மிதுனம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

லாபகரமான தினமாக இருக்கும். புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இன்றைய தினத்தை லாபகரமான, வெற்றியான நாளாக மாற்றுவீர்கள். வேலை, தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம், மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.

கடகம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

விழிப்புடன் இருக்க வேண்டிய தினம் இன்று. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். அலுவல் காரணமாக திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சண்டையைத் தவிர்க்கத் துணையுடன் மனம் விட்டுப் பேசுங்கள். செலவு இருக்கும். பணத்தைக் கவனத்துடன் செலவு செய்யுங்கள்.

சிம்மம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் மந்தமாகவே கழியும். இருப்பினும் எதிர்பார்த்த வேலைகள் நடந்து முடியும். மனக் குழப்பம் ஏற்படும். அதிக வேலைகள் உங்களை வாட்டி வதைக்கும். குடும்பத்தில் அமைதி குறைவாகவே இருக்கும். கவனக் குறைவு காரணமாக பணத்தை இழக்க நேரிடலாம். கவனமாக இருக்க வவ்ணடிய நாள்.

கன்னி

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

உங்கள் முயற்சியின் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமான நாளாக மாற்றலாம். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணையுடன் புரிதல் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

துலாம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

மனம் அமைதி இன்றி காணப்படும். இருப்பினும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகள் மீது கவனம் செலுத்தி வேலை செய்தால் வெற்றி நிச்சயம். அதை விடுத்து வீணாக எழும் எதிர்மறை எண்ணங்களுக்குப் பலியாகிவிட வேண்டாம். துணைவருடன் வீண் சச்சரவுகள் எழலாம். அனுசரித்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியைத் தக்க வைக்க முடியும். பண வரவு தாமதமாகும்.

விருச்சிகம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் பெரிய அளவில் சாதகமாக அமையாது. எனவே, உங்கள் வழக்கமான பணிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். சவால்களை திறமையுடன் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். பணியில் சில தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, கவனத்துடன் இருங்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழுந்து மறையலாம். கூடுதல் செலவுகள் ஏற்படும்.

தனுசு

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். தொந்தரவுகள் சில வரும். அதைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் பணிக்கு உரிய மரியாதை இருக்காது என்பதால் வேலையில் எரிச்சல் உணர்வு ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஆரோக்கியமான உறவை பராமரிக்க முடியும். பண வருவாய் இருக்காது. ஆனால், செலவு மட்டும் அதிகரிக்கும்!

மகரம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

மனதில் தைரியம் அதிகரிக்கும். முன்னேற்றமான நாளாக அமையும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவருடன் அன்பாக இருப்பீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

கும்பம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

சுமுகமான, முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய தினம் சரியாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டமான நாள் இன்று.

மீனம்

11-1-2021 தினப்பலன்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமர்க்களமான நாளாக இருக்கும்!

இன்றைய தினம் பொறுமையை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டும். எதிலும் எதார்த்தநிலையை உணர்ந்து செயல்படுங்கள். குடும்பத்தில், வேலையில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அமைதியாக, நிதானமாக இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதீத உணர்ச்சிவசப்படுதல் காரணமாக குடும்பத்தில் சச்சரவு ஏற்படலாம். கவனம் தேவை.