8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

 

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

சார்வரி வருடம் I தை 26 I திங்கட்கிழமை I பிப்ரவரி 8, 2021

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

இன்றைய ராசி பலன்!

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

மேஷம்

இன்றைய நாள் உற்சாகமானதாக இருக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய தினம் சிறப்பானதாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு காரணமாக மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

ரிஷபம்

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அன்றாடம் வழக்கமாக செய்யும் வேலைகளை மட்டும் செய்வது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். வேலை, தொழிலில் உடன் பணி புரிபவர்கள், பணியாளர்களால் பிரச்னை வரலாம். சிலருக்கு எதிர்பாராத திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வீண் செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

மிதுனம்

வாய்ப்பு மிகுந்த நாளாக இருக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை பளு அதிகரிக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

கடகம்

பதட்டமான சூழல் காணப்படும். தாய் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். பணியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். இன்று மற்றவர்களுடன் பேசும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

சிம்மம்

இன்றைய தினம் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.  மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். வேலையில் சிறு தவறுகள் ஏற்பட்டு உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். கவனம் தேவை. குடும்பத்தில் சூழல் சாதகமாக இல்லை. கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வீண் செலவு அதிகரிக்கும்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை இன்றைய தினத்தில் தொடங்கினால் வெற்றி பெறுவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உறவினர்கள், நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

துலாம்

தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்த நாளாக இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை  செய்யும் இடத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதம் எழலாம். நிதி நிலை திருப்திகரமாக இருக்காது. தேவையற்ற செலவு அதிகரிக்கும்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

விருச்சிகம்

மந்தமான நாளாக இருக்கும். மனதில் பதற்றம் அதிகரிக்கும். வேலையில் குழப்பம் நிலவும். சக பணியாளர்களால் வீண் பிரச்னை வரலாம். குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படும். இதனால் மனம் அமைதி இன்றி அவதியுறும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவும் அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகள், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

தனுசு

உற்சாகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் வேலைகளை உற்சாகத்துடனும் பரபரப்புடனும் செய்து முடிப்பீர்கள். மனதில் வீண் கவலைகள் எழும். அதற்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புரிதல், அன்னியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

மகரம்

இன்றைய தினம் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். வேலை அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே உறவு வலுப்படும். கடன் வாங்கவேண்டிய சூழ் நிலை ஏற்படும். பணத்தை சேமிக்க முடியாது.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

கும்பம்

சாதகமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முன்னேற்றம் பெறுவீர்கள். முயற்சிகள் எளிதாகும். வேலை, தொழிலில் திருப்தியான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். சுமுகமான சூழல், நல்லிணக்கம் காணப்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். அவிட்டம் நட்சரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

8-2-2021 தினப்பலன் – உற்சாகம் மிக்க, சாதகமான திங்கட்கிழமை!

மீனம்

உற்சாகமான தினமாக இன்றைய நாள் இருக்கும். இன்றைய தினத்தை நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். வேலையில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.