4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

 

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

சார்வரி வருடம் I தை 22 I வியாழக்கிழமை I பிப்ரவரி 4, 2021

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

மேஷம்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வேலையை குறித்த நேரத்துக்கு முன்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

ரிஷபம்

சோதனைக்குரிய நாளாக இருக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வீண் வார்த்தைகள் காரணமாக அருகில் உள்ளவர்கள், குடும்பத்தினருடன் வீண் மன வருத்தம் ஏற்படலாம். இதுவே இன்றைய தினம் சோதனைக்குரியதாக மாற வாய்ப்புள்ளது. வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். கணவன் மனைவி இடையே குழப்பமான மனநிலை அதிகரிக்கும். பண வரவு இல்லை. செலவு அதிகரிக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

மிதுனம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். வேலையை விரைந்து முடிப்பீர்கள். அவ்வப்போது பதற்றமான உணர்வு வந்து மறையும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சரியாக இல்லை. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

கடகம்

அதிர்ஷ்டமான நாளாக இன்றைய தினம் இருக்கும். முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். குடும்பத்தில் உற்சாகம் நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை அதிர்ஷ்டமாக இருக்கும். செலவும் அதிகரிக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

சிம்மம்

சிரமமான நாளாக இன்றைய தினம் இருக்கும். மனதில் உள்ள வன்மத்தை நீக்கினால் வெற்றிகரமான நாளாக மாறும். வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வேலையை சரியான நேரத்துக்கு முடிக்கலாம். கணவன் மனைவி இடையே அமைதி நிலவும். அன்பாக பேசுவதன் மூலம் உறவை இனிமையாக்கலாம். செலவு அதிகரிக்கும், கவனம்!

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

கன்னி

வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். தடையை எண்ணி சோர்ந்து போகாமல் கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி காண்பீர்கள். வீண் பயம் பதற்றம் காரணமாக வேலையில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு நிலவும். நிதி நிலை திருப்திகரமாக இல்லை. சிலருக்குக் கொஞ்சம் பணம் வரலாம். செலவு அதிகரிக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

துலாம்

இன்றைய நாள் வெற்றிகரமாக மாறுவதும் வம்பில் சென்று முடிவதும் உங்கள் கையில்தான் உள்ளது. உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். வேலை பளு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படலாம். விட்டுக் கொடுப்பதன் மூலமும், வீண் வார்த்தை பிரயோகத்தைத் தவிர்ப்பதன் மூலமும் சுமூகமாக முடியும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

விருச்சிகம்

ஓரளவுக்கு வெற்றிகரமான நாளாகவே இன்றைய நாள் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலையை ஆத்மி திருப்தியோடு செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே பகிர்தல் அதிகரிக்கும். நல்லுறவு மேம்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

தனுசு

மனதில் ஏற்படும் தப்பெண்ணம், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிட வேண்டாம். இன்றைய நாள் சாதகமாக அமைய பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை பயன்படுத்தினால் வெற்றிகரமான நாளாக மாறும். வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சக பணியாளர்கள், உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். வார்த்தையில் கவனம் தேவை. நிதி நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். செலவு கையைக் கடிக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

மகரம்

பயம், பதற்றம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். பதற்ற மன நிலை காரணமாக வேலையில் தவறுகள் நேரிடலாம். கவனம் தேவை. கணவன் மனைவி இடையே புரிதல், மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு பண வரவுக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. செலவும் அதிகரிக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

கும்பம்

மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து இன்றைய தினத்தில் உங்களை பாடாய்படுத்தும். மனதில் நிம்மதி குறையும். வேலை பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே மோதல் எற்படலாம். பண வரவுக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. செலவும் கட்டுக்குள் இருக்கும்.

4-2-2021 தினப்பலன் – 6 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும்!

மீனம்

மனக் குழப்பம் மிக்க நாளாக இன்றறைய தினம் இருக்கும். கவலைப்படாமல் அமைதியாக இன்றைய நாளை கழிக்க வேண்டும். ஆற்றலுடன் உங்கள் வேலையை முடிப்பீர்கள். ஆனால் கடின உழைப்பு, திறனுக்கு அங்கீகாரம் கிடைக்காது. கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. செலவும் அதிகரிக்கும்.