ஒடிசா கிராமங்களில் சுனாமி ரெடி திட்டம்… யுனெஸ்கோ பாராட்டு! அப்படி என்னதான் விஷயம்?

 

ஒடிசா கிராமங்களில் சுனாமி ரெடி திட்டம்… யுனெஸ்கோ பாராட்டு! அப்படி என்னதான் விஷயம்?

சுனாமி எனும் பெயரைக்கூட நாம் 2004 ஆம் ஆண்டுக்கு முன் கேட்டிருக்க மாட்டோம். ஆனால், 2004 டிசம்பர் 26-ல் ஏற்படுத்திய பாதிப்பு என்றைக்கும் மறக்க முடியாத வடுவை நமக்குள் செலுத்திவிட்டது. அதனால் சுனாமியை எதிர்கொள்வதற்கும் உயிர்பலி, பொருளாதார சேதாரம் ஆகாமல் இருக்க உருவான திட்டம்தான் சுனாமி ரெடி.

இந்தத் திட்டத்தில் பொதுமக்கள், சமுதாயத் தலைவர்கள், தேசிய மற்றும் உள்ளூர் அவசரகால நிர்வாக முகமைகள் ஆகியோர் இடம்பெறுவர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் சுனாமியை எதிர்கொள்ள தயார் படுத்த யுனெஸ்கோ உருவாக்கியதே சுனாமி ரெடி.

ஒடிசா கிராமங்களில் சுனாமி ரெடி திட்டம்… யுனெஸ்கோ பாராட்டு! அப்படி என்னதான் விஷயம்?

யுனெஸ்கோ – ஐஓசி-யின் இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் பாதிப்புத் தடுப்பு அமைப்புக்கான (ICG/IOTWMS) அரசாங்கங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயித்துள்ள சிறந்த நடைமுறைக்கான குறிக்காட்டிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சமுதாய மக்கள் தயார் நிலையில் இருப்பதை மேம்படுத்தும் முறையான மற்றும் அமைப்பாக்கப்பட்ட அணுகுமுறையை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.

ஒடிசா கிராமங்களில் சுனாமி ரெடி திட்டம்… யுனெஸ்கோ பாராட்டு! அப்படி என்னதான் விஷயம்?

ஒடிசா மாநிலத்தில் சுனாமி ரெடி திட்டம் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (OSDMA), மூலம் இப்போது கஞ்சாம் மாவட்டத்தின் வெங்கட்ராய்ப்பூர் கிராமம் மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் நொலியாசாகி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் சுனாமியை எதிர்கொள்வதற்குத் தயாராக இருத்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கிராமங்களைப் பரிசீலித்துப் பார்த்த பிறகு தேசிய அளவிலான அங்கீகாரத்துக்காக யுனெஸ்கோ-ஐஓசி அமைப்புக்குப் பரிந்துரை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.

ஒடிசா கிராமங்களில் சுனாமி ரெடி திட்டம்… யுனெஸ்கோ பாராட்டு! அப்படி என்னதான் விஷயம்?

தேசிய வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் யுனெஸ்கோ-ஐஓசி அமைப்பானது வெங்கட்ராய்ப்பூர் மற்றும் நொலியாசாகி ஆகிய இரண்டு கிராமத்தின் சமுதாயத்தினரை ”சுனாமி ரெடி சமுதாயத்தினர்” என அங்கீகரித்துள்ளது.  இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சுனாமி ரெடி திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நாடாக இந்தியாவும், முதல் மாநிலமாக ஒடிசாவும் திகழ்கின்றன.

வெங்கட்ராய்ப்பூர் மற்றும் நொலியாசாகி கிராம சமுதாயத்தினருக்கு யுனெஸ்கோ-ஐஓசி அமைப்பின் அங்கீகாரச் சான்றிதழையும் பாராட்டுச் சான்றிதழையும் இன்ரு இணைய வழி நிகழ்ச்சி மூலம் வழங்குகிறது.