குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி? – 4 பேரை பிடித்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்கள்!

 

குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி? – 4 பேரை பிடித்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்கள்!

தென்காசி

தென்காசி அருகே வனப்பகுதியில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக கூறி சாமியார், 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி அணை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் சொகுசு கார் ஒன்று அணைக்குச் செல்வதை கண்ட அந்தப்பகுதி வாசிகள் சிலர், பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது, காவி உடையணிந்த முதியவர் ஒருவர், 2 சிறுமிகள், கைக் குழந்தையுடன் ஓர் ஆண் மற்றும் பெண் இருந்துள்ளனர். பச்சிளம் குழந்தையை தலை கீழாகத் பிடித்தபடி அந்த முதியவர் ஊதுபத்திக் காட்டி கொண்டிருந்துள்ளார்.

குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி? – 4 பேரை பிடித்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்கள்!

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதிவாசிகள், குழந்தையை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக கருதி, ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முதியவர், சிறுமிகள் மற்றும் பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லாதபோது, எப்படி சாமியார் அணைக்கு வந்தார்? என்றும், அதிகாரிகள் துணையுடன் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றுள்ளார் என்றும் கூறி தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை சமரசம் செய்து, 5 பேரையும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் சிவகாசியை சேர்ந்தவர்கள் என்பதும், முதியவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடனாநதி வனப்பகுதியில் உள்ள அத்ரி கோயிலுக்கு செல்வதும் தெரியவந்தது. நேற்று அத்ரி கோவிலில் வழிபட சென்றபோது, இரவாகியதால் அணைப் பகுதியில் இருந்து வழிபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, ஓட்டுநரை தவிர்த்து மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். நரபலி கொடுப்பதாக இரவில் சாமியார் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.