ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கு முயற்சிப்போம்! பாபா ராம்தேவ் பேட்டி

 

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கு முயற்சிப்போம்! பாபா ராம்தேவ் பேட்டி

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி டைட்டில் ஸ்பான்சரை ஏற்க இந்திய நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை என்றால் பதஞ்சலி அந்த முயற்சியில் இறங்கும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகள் இந்த ஆண்டு ஐக்கிய அரசு எமிரேட்சில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக வீவோ மொபைல் போன் நிறுவனம் இருந்தது. சீனா ஆப்களை தடைசெய்த மத்திய அரசு, சீன நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருப்பதை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பின. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ள நிலையில் வீவோ விவகாரம் சூடு கிளப்பியது. இதைத் தொடர்ந்து டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகுவதாக வீவோ அறிவித்தது.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கு முயற்சிப்போம்! பாபா ராம்தேவ் பேட்டி
ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற ஜியோ, அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றன. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் இந்த போட்டியில் குதித்தது. இதை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கு முயற்சிப்போம்! பாபா ராம்தேவ் பேட்டி
இது குறித்து பாபா ராம்தேவிடம் கேட்டபோது, “ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை எந்த ஒரு இந்திய நிறுவனமும் ஏற்க முன்வரவில்லை என்றால் பதஞ்சலி அந்த முயற்சியில் இறங்கும். ஏற்கனவே பதஞ்சலி விண்ணப்பித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை. ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்காக எந்த ஒரு விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் பதஞ்சலி வழங்கவில்லை. இந்திய சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிக்க விட மாட்டோம்” என்றார்.

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சருக்கு முயற்சிப்போம்! பாபா ராம்தேவ் பேட்டி
பதஞ்சலி நிறுவன செய்தித் தொடர்பாளர் ஏற்கனவே டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பெற முயற்சி செய்வோம் என்று கூறியிருந்த நிலையில், இந்திய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சர் பெற முடியாவிட்டால் முயற்சிப்போம் என்று பாபா ராம்தேவ் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சர் பெறுவது அவர்கள் கேட்கும் ஏலத்தின் அடிப்படையில் உள்ளது. அதிக ஏலத்துக்கு வெளிநாட்டு நிறுவனம் ஏற்ற பிறகு பதஞ்சலி முயற்சி செய்து என்ன ஆகப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.