ஆன்லைனில் நாய் கூண்டு விற்க முயற்சி ! 80 ஆயிரம் ரூபாயை இழந்த குடும்பப் பெண் !!

 

ஆன்லைனில் நாய் கூண்டு விற்க முயற்சி ! 80 ஆயிரம் ரூபாயை இழந்த குடும்பப் பெண் !!

நாய் கூண்டு ஒன்றை இணையதளத்தில் விற்க முயன்ற இல்லத்தரசி ஒருவர் ஆன்லைனில் மோசடி செய்பவர்களிடம் ரூ.80,000 இழந்தார்.
மேற்கு பெங்களூரு பட்டானகேரைச் சேர்ந்த இல்லத்தரசி அளித்த புகாரின் அடிப்படையில் திங்களன்று சைபர் கிரைம் போலீசார் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். தன்னிடம் ஒரு நாய்க் கூண்டு இருப்பதாகவும் அதை விற்க முடிவு செய்ததாகவும் ரத்னா போலீசாரிடம் தெரிவித்தார். அவர் ஒரு இணையதளத்தில் அதற்காக விளம்பரத்தை வெளியிட்டார்.

ஆன்லைனில் நாய் கூண்டு விற்க முயற்சி ! 80 ஆயிரம் ரூபாயை இழந்த குடும்பப் பெண் !!
இதுகுறித்து இல்லத்தரசி தெரிவிக்கையில், “எனக்கு மே 14இல் ஒரு அழைப்பு வந்தது, அழைப்பாளர் தன்னை அஜய் குமார் என்று அறிமுகப்படுத்தினார். அவர் கூண்டு வாங்கிக் கொள்வதாக கூறினார். அஜய் தனது நண்பர் கன்னையா என்பவர் பணத்தை தருவார் என கூறினார். அதே நாளில், வேறொருவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, கன்னையா என்று கூறியவர். பணத்தை மாற்றுவதற்காக எனது கூகிள் பே அல்லது ஃபோன்பே விவரங்களை பகிர்ந்து கொள்ளும்படி அவர் என்னிடம் கேட்டார். அதை எண்ணை உறுதிப்படுத்த ரூ.2,000 தருமாறும் அந்த பணத்தை நாய்க் கூண்டு வாங்குவதற்கு பணம் தரும்போது திரும்பி தந்துவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் என்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு பலமுறை பரிவர்த்தனை செய்து 80 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டார். பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துஅந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
“ஐபிசி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீச் வழக்கை பதிவு செய்துள்ளது.. சந்தேக நபர்களைக் கண்டறிய மொபைல் எண்களை வைத்து காவல்துறையினர் அவர்களை தேடிவருகின்றனர்.