’நானே அதிபர்’ முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முக்கிய சந்திப்புகளை நடத்தும் ஜோ பைடன்!

 

’நானே அதிபர்’ முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முக்கிய சந்திப்புகளை நடத்தும் ஜோ பைடன்!

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்ட்டினார். ஓரிரு நாள் இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார். ஆயினும் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

’நானே அதிபர்’ முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முக்கிய சந்திப்புகளை நடத்தும் ஜோ பைடன்!

ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அதிரடியைக் காட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதன் வரிசையில் தற்போது அமெரிக்கத் தேர்தலில் நானே வென்றேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால், அமெரிக்க தேர்தல் பற்றிய விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இது ஒருபக்கம் நடந்தாலும், ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்கும் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. ஜனவரி மாத இறுதியில் ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

’நானே அதிபர்’ முரண்டு பிடிக்கும் ட்ரம்ப்; முக்கிய சந்திப்புகளை நடத்தும் ஜோ பைடன்!

ஜோ பைடன் அதற்கேற்ற வகையில் ட்ரம்பிடமிருக்கும் அதிகாரங்களைத் தமக்கு மாற்ற குழுக்களை அமைத்துள்ளார். அக்குழுவில் 20 இந்திய வம்சாவளியினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மருத்துவக்குழுவையும் ஜோ பைடன் அமைத்துள்ளார்.

அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களும் ஜோ பைடன் பக்கம் சாயத்தொடங்கிவிட்டன. சமீபத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய பல நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் ஜோ பைடனுடன் சந்திப்பை நடத்தி முடித்துள்ளனர்.