ட்ரம்ப் vs ஜோ பைடன் – அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

 

ட்ரம்ப் vs ஜோ பைடன் – அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

நாளை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் – உலக நாடுகளே ஒரு நாட்டின் தேர்தலை உற்றுநோக்கும் என்றால், அது அமெரிக்காவின் தேர்தலைத்தான். ஏனெனில், அமெரிக்காவின் அரசியல் உலகின் அனைத்து நாடுகளிலும் சிறிய அளவிலாவது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் உலக சந்தையைக் கட்டுப்படுத்து வல்லரசு நாடுகளில் பெரிய நாடு இதுவே. எனவே அமெரிக்க தேர்தலின் ஒவ்வோர் அசைவும் மிகுந்த நுட்பத்தோடு கவனிக்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

ட்ரம்ப் vs ஜோ பைடன் – அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

இருவரில் யார் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்பதே இப்போது எல்லோரும் முன் உள்ள ஒரே கேள்வி.

தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பலமாகப் பலரும் கணிப்பது, அவர் அமெரிக்காவில் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய முயற்சி எடுத்ததையே. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மக்களுக்கு விசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகளை உருவாக்கினார். இதனால், அமெரிக்காவில் ஒரு பகுதியினருக்கு ட்ரம்ப் செயல்பாடு மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப் vs ஜோ பைடன் – அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?

ஜோ பைடனின் வெற்றிக்கு காரணமாக, அதிபர் ட்ரம்பின் தவறுகளே அமையும் எனக் கணிக்கிறார்கள். உதாரணமாக, கொரோனா தொற்று மோசமாக இருக்கும் என பிப்ரவரி மாதமே ட்ரம்ப்க்குத் தெரியப்படுத்தியிருந்தும், அதைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியது பைடனுக்கு வெற்றியைத் தேடி தரும் என்கிறார்கள். மேலும், இந்தியா உள்ளிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை எளிமைப்படுத்தும் திட்டங்களை முன்வைப்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகள் ஒருசேர பைடனுக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் தொடர்பாக ஆர்வமாக இருப்பதால் சூழலியல் செயற்பாட்டாளர்கள் ஆதரவையும் பெறுகிறார்.

அமெரிக்கா மாகாணங்களில் இரண்டு அல்லது மூன்றைத் தவிர மற்றவற்றில் பைடனுக்கே ஆதரவு என்று பேசப்படுகிறது. பிபிசி மேற்கொண்ட கருத்து கணிப்பிலும் ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார்.