ட்ரம்பை முந்தினார் ஜோ பைடன் – ஜார்ஜியா மாகாண நிலவரம்

 

ட்ரம்பை முந்தினார் ஜோ பைடன் – ஜார்ஜியா மாகாண நிலவரம்

அமெரிக்கா தேர்தலில் அதிபர் யார் எனும் முடிவு இழுபறியிலேயே இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் அதிபருக்கான மெஜாரிட்டிக்கு 270 வாக்குகள் தேவை. இப்போதைய நிலையில் ஜோ பைடன் 264 ; ட்ரம்ப் 214 என்ற நிலையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இன்னும் சில மாகாணங்களில்தான் முடிவு தெரியாமல் இருக்கின்றன. அவற்றில் ஜார்ஜியாவும் ஒன்று. ஜார்ஜியாவில் ட்ரம்ப் கையே ஓங்கியிருந்தது. ஆனால், சட்டென்று ஜோ பைடனுக்கு வாக்குகள் அதிகரித்தன. உடனே, இங்கு வாக்கு எண்ணிக்கையைத் தொடரக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார் ட்ரம்ப்.

ட்ரம்பை முந்தினார் ஜோ பைடன் – ஜார்ஜியா மாகாண நிலவரம்

வழக்குத் தொடுக்க ஏன் இந்த அவசரம் ட்ரம்ப்க்கு எனில், இங்கு யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு 16 வாக்குகள் கிடைக்கும். அது ஜோ பைடனுக்குக் கிடைக்கும்பட்சத்தில் எவ்வித தடையுமில்லாமல் அவர் அதிபராகி விடும். ஏனெனில், அவரின் வெற்றிக்கு இன்னும் 6 வாக்குகளே தேவை. ஆனால், நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

ட்ரம்பை முந்தினார் ஜோ பைடன் – ஜார்ஜியா மாகாண நிலவரம்

ஜார்ஜியாவில் 99 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருமே 49.4 சதவிகித வாக்கு விகிதத்தோடு சமமான பலத்தில் இருக்கிறார்கள். சில மணிநேரத்திற்கு முன் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் ட்ரம்ப்.

ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. ஜோ பைடனுக்கான ஆதரவு ஓட்டுகள் உயர்ந்து, ட்ரம்பை விட அதிகம் பெற்று முன்னேறி விட்டார்.

தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 24,49,371 வாக்குகளும் இவரை விட சுமார் 900 வாக்குகள் பின்தங்கி ட்ரம்ப் 24,48,454 வாக்குகளும் பெற்றுள்ளனர். நிலைமை முன்பை விட இன்னும் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது.