Home உலகம் இந்தியாவின் கொரோனா மரணங்கள் பற்றி அமெரிக்காவில் விவாதம்! – ட்ரம்ப் Vs ஜோ பிடன்

இந்தியாவின் கொரோனா மரணங்கள் பற்றி அமெரிக்காவில் விவாதம்! – ட்ரம்ப் Vs ஜோ பிடன்

அமெரிக்க தேர்தல் அருகில் வர வர பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. அதன் முக்கியமான ஒரு விவாதம் நேற்று அரங்கேறியிருக்கிறது.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது.  குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார். 

அமெரிக்கத் தேர்தலில் கொரோனா முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வளவு அலட்சியமாக பெருந்தொற்று நோயைக் கையாளலாமா? என்று டிரம்புக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அதற்காக தேர்தலுக்கு ஓரிரு நாள் முன்பாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டிரம்ப்.

இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்துகொண்டனர்.

”தான் அதிபரானால் காலநிலை மாற்றம் குறித்த முக்கியமான செயற்பாடாக பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பேன்”என்றார் ஜோ பிடன்.

ஜோ பிடனின் கருத்துக்குப் பதில் சொல்லும் விதமாக ட்ரம்ப், ‘புவி வெப்பமயமாதலுக்கு ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் காரணம்’ என்றார்.

அமெரிக்காவில் இன்றைய தேதி வரை கொரோனாவின் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்துவிட்டது. 2 லட்சத்து 10 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டிப் பேசினார் ஜோ பிடன்.

“உலகளவில் அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனாவைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது.  அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் ட்ரம்ப்தான்” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார் ஜோ பிடன்.

அதற்கு அதிபர் ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”இந்தியாவிலும் மரணம் அதிகம். இந்தியா கொரோனா மரணங்கள் பற்றிய சரியான விவரங்களை அளிக்க வில்லை” என்றார்.

ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ட்ரம்ப் Vs ஜோ பிடன் விவாதம் பல்வேறு விஷயங்களைப் பற்றி அனல் பறக்கும் விவாதமாக மாறியது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 52 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி...

பெரியார் கூட விபூதியை வைத்துக்கொண்டார்; ஆனால் ஸ்டாலினோ அவமதிப்பு செய்துள்ளார்- பொன். ராதா

தேவர் ஜெயந்தியையொட்டில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது....

திருநீரை கீழே கொட்டிய ஸ்டாலின்… அது என்ன டால்கம் பவுடரா? அண்ணாமலை கேள்வி

தேவர் ஜெயந்தியையொட்டில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது....

பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள்; அவை ஜொலிக்க முடியாது: கே.எஸ்.அழகிரி

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, “தமிழகத்தில் வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. கடவுள் முக்கியமல்ல கடவுள்...
Do NOT follow this link or you will be banned from the site!