மீண்டும் மீண்டும் சீன பூச்சாண்டி காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

 

மீண்டும் மீண்டும் சீன பூச்சாண்டி காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்க தேர்தல் தேதி மிகவும் நெருங்கி வந்துவிட்டது. அதனால் இரு தரப்பிலும் பிரசாரங்களில் அனல் பறக்கிறது.

நவம்பர் மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் சீன பூச்சாண்டி காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தற்போதைய அதிபர் ட்ரம்ப் எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விமர்சனம் என்பது கொரோனா நோய்த் தொற்றை அலட்சியமாகக் கையாண்டது. நாட்டில் பரவும்போதும் சரி, தனக்கு வந்தபோதும் சரி, இவ்வளவு அலட்சியமாக ஒருவரால் கையாள முடியுமா என்பது போலவே டிரம்பின் செயல்பாடுகள் இருந்தன.

இந்நிலையில் ட்ரம்ப் கையில் எடுத்திருக்கும் இன்னோர் அஸ்திரம்தான் சீனா. தொடக்கம் முதலே ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை சீனாவின் ஆதரவாளராகக் காட்டவே அதிக முயற்சி எடுத்து வருகிறார் ட்ரம்ப்.

மீண்டும் மீண்டும் சீன பூச்சாண்டி காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

கொரோனா சிகிச்சை முடிந்து நேற்று பிரசாரத்தில் ஈடுப்பட்ட ட்ரம்ப் பேசும்போது, ‘ஜோ பைடன் வென்றால் இடதுசாரிகள் வென்றது போல; சீனா வென்றது போல’ என்றே மீண்டும் மீண்டும் சீன பூச்சாண்டி காட்டி வருகிறார்.

ட்ரம்பின் இந்த ஸ்டேட்டஜி தேர்தலில் எடுபடுமா… அது ஜோ பைடனுக்கு எதிராக வாக்குகளாக மாறுமா என்பதை தேர்தல் முடிவுகளே உலகிற்கு தெரிவிக்கும்.