உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவு துண்டிப்பு – டிரம்ப் அறிவிப்பு

 

உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவு துண்டிப்பு – டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவு துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.  

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் அதை எதிர்த்து உலக சுகாதார அமைப்பு போராட தவறி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியை வழங்குவதில் உலக சுகாதார அமைப்பு தவறாக செயல்படுவதாக கடந்த மாதம் கூறிய டிரம்ப், அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தினார்.

உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவு துண்டிப்பு – டிரம்ப் அறிவிப்பு

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை போல செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். அவர்கள் தங்களின் போக்கைமாற்றிக் கொள்ளாவிட்டால் அமெரிக்கா அந்த அமைப்புக்கு நிதி வழங்குவது நிரந்தரமாக தடை செய்யப்படும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், தேவைப்படும் சில சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால் உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்காவின் உறவை இன்றுடன் துண்டித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து இந்த உலகிற்கு பதில் தேவை. அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.