“எனக்காடா என்ட் கார்டு போடுறீங்க” – எவனும் தடுக்க முடியாது என டிரம்ப் சூளுரை!

 

“எனக்காடா என்ட் கார்டு போடுறீங்க” – எவனும் தடுக்க முடியாது என டிரம்ப் சூளுரை!

அமெரிக்க வரலாற்றிலேயே இப்படியொரு மோசமான அதிபரை யாரும் பார்த்ததில்லை என்று உலகமே விமர்சிக்கும் வண்ணம் நடந்துகொண்டவர் டிரம்ப். தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடித்தார். தேர்தல் முறைகேடு என வழக்கு தொடர்ந்தார். அதில் தோற்றார். ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு வரலாறு காணாத வன்முறைக்கு வித்திட்டார். ஆனால் அவரின் எந்த பாட்ஷாவும் பலிக்காமல் போனது தான் பரிதாபத்தின் உச்சம்.

“எனக்காடா என்ட் கார்டு போடுறீங்க” – எவனும் தடுக்க முடியாது என டிரம்ப் சூளுரை!

இதுமட்டுமில்லாமல் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் என சமூக வலைதளங்கள் அவரின் கணக்குகளை நிரந்தரமாக முடக்கினார். டிஜிட்டல் உலக வரலாற்றிலேயே ஒரு அதிபரின் கணக்கு முடக்கப்பட்டிருப்பது அதுவே முதல் முறை. ஆட்சி முடிவில் இப்படியென்றால் ஆட்சிக்காலத்திலும் பல விபரிதமான முடிவுகளை எடுத்து வெளிநாட்டவர்களை வதைத்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தீவிர தேசியவாத வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதால் இடதுசாரிகளின் பலத்த எதிர்ப்புக்குள்ளானார். ஜனவரி 20ஆம் தேதியோடு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் முதல் முறையாகப் பொதுமேடையில் நேற்று தோன்றினார்.

“எனக்காடா என்ட் கார்டு போடுறீங்க” – எவனும் தடுக்க முடியாது என டிரம்ப் சூளுரை!

ஆர்லாண்டோவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் பேசுகையில், “உங்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் நுழைவோம். நான் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக நுழைவேன். நான் புதிய கட்சியை ஆரம்பிக்க போவதில்லை. எனக்கு குடியரசுக் கட்சி இருக்கிறது. நான் மீண்டும் போட்டியிடுவதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து 2024ஆம் ஆண்டு அதிகாரத்தைச் சென்றடைவோம். எப்படியும் பைடனின் ஆட்சி மிக மோசமாக தான் இருக்கப் போகிறது. நாம் இன்று தொடங்கியுள்ள இந்தப் பயணம் முடிவடைய நாம் காத்திருக்க வேண்டும்”