darbar
  • January
    17
    Friday

Main Area

Main



டிரம்பை வில்லனாக காட்டிய டிரம்ப் பிரசார குழு!

டிரம்ப்
டிரம்ப்

எல்லோருக்கும் ஹீரோவாக இருப்பதுதான் பிடிக்கும். ஆனால், டிரம்பை வில்லனாக அவருடைய பிரசார குழுவே காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trump

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டிரம்பை நீக்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சில நிமிடங்களில், அவெஞ்சர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் வரும் உலகத்தின் பாதியை அழிக்கும் மிக மோசமான இன அழிப்பு வில்லன் வேடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது பிரசார குழு காட்டியுள்ளது. அதில், என்னை தவிர்க்கவே முடியாது என்று டொனால்ட் டிரம்ப் கூறுவது போல அந்த வீடியோவை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடென். இவர் மீது முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும்படி உக்ரைன் அரசுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற புலனாய்வுக் குழு இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
குற்றச்சாட்டைக் கூறியவர்கள், விசாரித்தவர்களை மிரட்டும் வகையில் அவருடைய பிரசார குழுவான டிரம்ப் வார் ரூம் இந்த மார்ஃபிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது இது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மிக சரியான பொருத்தமான வேடத்தில் டிரம்ப் உள்ளார் என்று பலரும் இதற்கு கமெணட் செய்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.