“அடுத்து காலில் விழுவாரா?”-தமிழ்நாடு ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப்

 

“அடுத்து காலில் விழுவாரா?”-தமிழ்நாடு ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப்

நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க தேர்தலில் பிரச்சாரம் அனல் பறக்கிறது .ஒரு புறம் ஜோ பிடன் கட்சியினர் மிக பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், ட்ரம்ப் நம்மூர் யுக்தியை பின்பற்றி பிரச்சாரம் செய்வது அவரின் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

“அடுத்து காலில் விழுவாரா?”-தமிழ்நாடு ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப்


இந்த கொரானா இடர்களுக்கு மத்தியிலும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது .சமீபத்தில் வந்த கருத்துக்கணிப்பில் ட்ரம்ப் பின்தங்கியிருப்பதாக வந்ததால் ,ட்ரம்ப் சோர்வடையாமல் நம்ம ஊர் ஸ்டைலில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார் .அதன் படி இதுவரை ஒரு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தினை தொலைக்காட்சியில்தான் செய்வார் .ஆனால் ட்ரம்ப் அந்த மரபுகளை உடைத்தெறிந்து மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்கிறார் .மேலும் ஒரு ஊனமுற்றவரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் .இன்னும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல ஒரு பாட்டியை கட்டிப்பிடித்து ஓட்டு கேட்கவில்லை ,இன்னும் சில நாள் போனால் அதையும் செய்வார் போல் இருக்கிறது .ட்ரம்பின் இந்த அதிரடி பிரச்சாரத்தால் அவரின் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர் .
அது மட்டுமல்ல்லாமல் இந்தியர்களின் வாக்குகளை ஜோ பிடன், கமலா ஹாரிஸ் மூலம் பெற்று விட போகிறார் என்ற பயத்தில் ,சில இந்தியர்களுக்கு அவசர அவசரமாக சில நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகைக்கே வரவைத்து குடியுரிமை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் .இதே நிலை நீடித்தால் ட்ரம்ப் வாக்கு வாங்குவதற்கு நம்ம ஊர் தலைவர்கள் போல வாக்காளரின் காலில் விழாமல் இருந்தால் சரியென்று அங்கிருக்கும் மாற்று கட்சியினர் கூறினார்கள் .

“அடுத்து காலில் விழுவாரா?”-தமிழ்நாடு ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப்