Home உலகம் முக்கிய அதிகாரியை டிஸ்மிஸ் செய்தார் ட்ரம்ப் - காரணம் என்ன தெரியுமா?

முக்கிய அதிகாரியை டிஸ்மிஸ் செய்தார் ட்ரம்ப் – காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான தேர்தல் நடந்தது. கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். யார் அதிபர் என்பதில் மூன்று நாட்கள் கடும் இழுபறி ஏற்பட்டது.

அதிபருக்கான மெஜாரிட்டி வாக்குகளான 270யைத் தொட இருவருமே போராடினார்கள். இறுதியில் ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அவர் வரும் ஜனவரி மாத இறுதியில் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரங்களைக் கைமாற்றும் குழுக்களையும் ஜோ பைடன் அமைத்திருக்கிறார். அதில் இந்தியர்கள் 20 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இன்னொரு புறம், இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதாகவும் நீதி மன்றத்தை நாடியுள்ளார் டொனால்டு ட்ரம்ப். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ளேன் என்றெல்லாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சைபர் செக்கியூரிட்டியைச் சேர்ந்த முக்கிய அதிகாரியான கிறிஸ்டோபர் கிரெப்ஸ் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதாவது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எவ்வித முறைகேடு நடக்கவிலை என்பதே அது. இதனால், ட்ரம்ப் சொல்வது எல்லாம் பொய் என்ற பேச்சு எழுந்தது. அது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது.

கிறிஸ் கிரெப்ஸின் செயல்பாடு ட்ரம்ப்க்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் கிறிஸ் கிரெப்ஸை உடனடியாக பதவியிலிருந்து நீக்கி உள்ளார். இதைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை...

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் : எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை...

“என் புருஷன கொலை செஞ்சத போல உன் புருஷனையும் கொல்வேன்” -குடும்ப சண்டையில் நடந்த கொலை

ஒரு குடும்பத்தில் மாமா மச்சானுக்குள் நடந்த சண்டையில் மைத்துனரை தீ வைத்து கொன்ற ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் .

நிவர் புயல் எதிரொலி: விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!

வங்கக்கடலில் நேற்று உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகரிப்பதால்,...
Do NOT follow this link or you will be banned from the site!