H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் : அமெரிக்க வெளியுறவுத்துறை

H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் : அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் H1B விசா முறையை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் இந்த ஆண்டு இறுதி வரை H1B விசா மற்றும் பிற பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் : அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளால் அதிகளவில் இந்திய ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகினர். அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் இந்திய ஊழியர்கள் H1B விசா மூலம் பணியாற்றி வந்த நிலையில் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் : அமெரிக்க வெளியுறவுத்துறை

இந்நிலையில் கடந்த ஜூன் 22 இல் H1B விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தளர்வை அறிவித்துள்ளது. H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.