கொரோனா தடுப்பு மருந்தாக ரெம்டெசிவிர் பயன்படுத்துவதில் சிக்கல்!

 

கொரோனா தடுப்பு மருந்தாக ரெம்டெசிவிர் பயன்படுத்துவதில் சிக்கல்!

உலகையே பெரும் அச்சத்தைப் பரப்பு வருகிறது கொரோனா தொற்று.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 91 லட்சத்து  76 ஆயிரத்து 103 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 93 லட்சத்து 79 ஆயிரத்து 089 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 02 ஆயிரத்து 946 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

  

கொரோனா தடுப்பு மருந்தாக ரெம்டெசிவிர் பயன்படுத்துவதில் சிக்கல்!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு எனும் நிலை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாவில் தடுப்பு மருந்து அறிவிப்புகள் வந்தும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வரவில்லை.

அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா தடுப்பு மருந்தாகப் பரிந்துரை செய்யப்பட்டது. அதனால், இம்மருந்தை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்ய முடிவு செய்தது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான 11 ஆயிரத்துக்கு அதிகமான நோயாளிகளிடம் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்டவை சிகிச்சையில் அளிக்கப்பட்டன. ஆனால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

கொரோனா தடுப்பு மருந்தாக ரெம்டெசிவிர் பயன்படுத்துவதில் சிக்கல்!

எனவே, உலக சுகாதார மையம் ரெம்ரெசிவிர் மற்ரு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய இரு மருந்துகள் மீது நம்பிக்கை தரும் குறிப்புகளை அதன் அறிக்கையில் குறிப்பிட வில்லை. அதனால், ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் தீர்க்கமான முடிவுகள் இன்னும் சில நாட்களில் தெரிய வரலாம்.