‘இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு’ : தமிழக அரசு அரசாணை!

 

‘இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு’ : தமிழக அரசு அரசாணை!

கோயில்களில் பணியாற்றி வரும் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை 3 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோவில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில், தாளம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு ரூ.1,500க்கும் குறைவாகவே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை ஏற்ற தமிழக அரசு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்திருந்தது.

‘இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு’ : தமிழக அரசு அரசாணை!

இந்த நிலையில், கோவில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கான மாத ஊதியத்தை 3 மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,500ஐ உயர்த்தி ரூ.4,500 ஆக வழங்கப்படும் என்றும் தவில் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000ஐ உயர்த்தி ரூ.3,000 ஆக வழங்கப்படும் என்றும் தாளம் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.750 ஐ உயர்த்தி ரூ.2,250 ஆக வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இசைக் கலைஞர்களுக்கான இந்த ஊதிய உயர்வு நவம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.