கட்சி தொண்டனாக நீடிப்பேன்.. அமைச்சர் பதவியை உதறிய ராஜீப் பானர்ஜி.. நிம்மதியான மம்தா பானர்ஜி …

 

கட்சி தொண்டனாக நீடிப்பேன்.. அமைச்சர் பதவியை உதறிய ராஜீப் பானர்ஜி..  நிம்மதியான மம்தா பானர்ஜி …

மேற்கு வங்கத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜீப் பானர்ஜி வேறு கட்சிக்கு மாற போவதாக யூகங்கள் வெளியானது. ஆனால், நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டனாக தொடர்ந்து இருப்பேன் என்று ராஜீப் பானர்ஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜீப் பானர்ஜி. இவர் நேற்று முன்தினம் ராஜீப் பானர்ஜியின் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான ராஜினாமா கடிதத்தை மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் ஏற்றுக் கொண்டார். ராஜீப் பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை பதவியை ராஜினாமா செய்ததால் கட்சியை விட்டு விலக வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் ராஜீப் பானர்ஜியிடம் கேட்டனர். அதற்கு ராஜீப் பானர்ஜி கூறியதாவது:

கட்சி தொண்டனாக நீடிப்பேன்.. அமைச்சர் பதவியை உதறிய ராஜீப் பானர்ஜி..  நிம்மதியான மம்தா பானர்ஜி …
ஜகதீப் தங்கர்

நான் கணிப்புகளை நம்பவில்லை. எதிர்காலத்தை பற்றி யாருக்கும் தெரியாது. வரும் நொடிகளில் என்ன நடக்கும் என்று எனக்கும் கூட தெரியாது. இன்று வரை நான் ஒரு கட்சி தொண்டன். அதை தொடர்ந்து செய்வேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் (மம்தா பானர்ஜி) என்னை நீர்ப்பாசன துறையிலிருந்து நீக்கி விட்டார். அகற்றுவதற்கு முன் ஒரு மரியாதை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து நான் அந்த துறையிலிருந்து விலக்கப்பட்டதே தெரிந்து கொண்டேன்.

கட்சி தொண்டனாக நீடிப்பேன்.. அமைச்சர் பதவியை உதறிய ராஜீப் பானர்ஜி..  நிம்மதியான மம்தா பானர்ஜி …
மம்தா பானர்ஜி

உடனே நான் அந்த நேரத்தில் வெளியேற நினைத்தேன். ஆனால் தலைவர்கள் என்னை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த முறை, சக தொண்டர்களுடனும், தலைவர்களுடன் பேசிய பிறகு, மேற்கு வங்க வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன், நான் ஒழுக்கமான கட்சி ஊழியராக இருப்பதால் இது எனக்கு வலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சியிலிருந்து விலக மாட்டேன் தொடர்ந்து கட்சி தொண்டான இருப்பேன் என்று ராஜீப் பானர்ஜி தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்து இருக்கும்.