பா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது.. ஆனால் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.

பா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது.. ஆனால் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.

எதிர்காலத்தில் பா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது ஆனால் எனது தொகுதி மக்களுக்காக உறுதியாக பணியாற்றுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. கூறியிருப்பது அந்த கட்சியினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைஷாலி டால்மியா இது தொடர்பாக கூறியதாவது: லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் கட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. சில மக்கள் அவரை பணியாற்ற அனுமதிக்கவில்லை. அவர் மக்களுக்காக பணியாற்ற விரும்பினார். திரிணாமுல் காங்கிரசில், ஹவுராலிருந்து சில மூத்த தலைவர்கள் கட்சிக்கு கரையான் போன்றவர்கள். சொந்த கட்சியினரை அவர்கள் முறையாக செயல்பட அனுமதிக்கவில்லை.

பா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது.. ஆனால் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.
திரிணாமுல் காங்கிரஸ்

லக்ஷ்மி ரத்தன் சுக்கா இந்த பிரச்சினையை மேலிடத்தில் எழுப்பினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நானும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறேன். இது குறித்து நான் குரல் கொடுத்தேன். இனி கட்சி தலைமைதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலம் பற்றி (பா.ஜ.க.வில் சேருவது?) பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது தொகுதியில் உள்ள மக்களுக்காக உறுதியாக பணியாற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

பா.ஜ.க.வில் சேருவேனான்னு தெரியாது.. ஆனால் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்.. மம்தா கட்சி எம்.எல்.ஏ.
ஜகதீப் தங்கர்

அண்மையில் கவர்னரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அவருக்கு (கவர்னர் ஜகதீப் தங்கர்) என் அப்பா டால்மியாவை நன்றாக தெரியும். கவர்னர் எந்த கட்சியையும் சார்ந்தவர் இல்லை, எந்தவொரு எல்லையும் இருக்க கூடாது என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். எதிர்காலம் பற்றி தெரியாது என்ற பதில், கவர்னருடன் சந்திப்பு போன்றவற்றை வைத்து பார்க்கும்போது வைஷாலி டால்மியா பா.ஜ.க.வுக்கு தாவி விடுவோரோ என்ற சந்தேகம் அந்த கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.