குரைக்கும் கருப்பு நாய்.. மேற்கு வங்க கவர்னரை விமர்சனம் செய்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.

 

குரைக்கும் கருப்பு நாய்.. மேற்கு வங்க கவர்னரை விமர்சனம் செய்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.

மேற்கு கவர்னரை குரைக்கும் கருப்பு நாய் என்று மக்கள் நினைக்கிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேங்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான புகார்களை விசாரிக்க தேசிய உரிமைகள் உரிமைகள் ஆணையத்தக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி மேற்க வங்க அரசு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் ஒரு வார பயணமாக வட வங்காளத்துக்கு சென்றார். டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருக்கு கருப்பு கொடிகள் காட்டப்பட்டது.

குரைக்கும் கருப்பு நாய்.. மேற்கு வங்க கவர்னரை விமர்சனம் செய்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.
திரிணாமுல் காங்கிரஸ்

இந்த விவகாரங்கள் தொடர்பாக மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா கூறியதாவது: மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லை. கவர்னர் மற்றும் பா.ஜ.க. ஆகியோர் பொய்யர்கள். எங்களுக்கு நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. நாங்கள் சட்டங்களின் போக்கில் செயல்படுகிறோம். பா.ஜ.க.வை போல நாங்கள் போக்கிரிதனம் செய்ய முடியாது. அவர் ஒரு கருப்பு கொடியால் போர்த்தப்படவில்லை என்பது தன்கருக்கு அதிர்ஷ்டம். இல்லையென்றால் மக்கள் அவரை ஒரு கருப்பு யானையுடன் குழப்பியிருப்பார்கள்.

குரைக்கும் கருப்பு நாய்.. மேற்கு வங்க கவர்னரை விமர்சனம் செய்த மம்தா கட்சி எம்.எல்.ஏ.
மதன் மித்ரா

கருப்பு நாய் குரைக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. மக்கள் தங்கரை குரைக்கும் ஒரு கருப்பு நாய் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர் எங்கு சென்றாலும் கருப்பு கொடிகள் காட்டப்படுகின்றன. இது ஒரு (திரைப்படம்) காட்சியாக இருந்தால் ஒரு குரைக்கும் கருப்பு நாய் காட்டப்படும். சில சமயங்களில் அவருக்கு மஞ்சள், சிகப்பு மற்றும் தங்க கொடிகளை காட்டும்படி மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாய்களுக்கு காட்டப்படுவது போல் அவருக்கு ஏன் எப்போதும் கருப்பு கொடிகளை காட்டுகிறார்கள்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.