எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. திரும்ப பெற்றுக்கோங்க.. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முகுல் ராய்

எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. திரும்ப பெற்றுக்கோங்க.. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முகுல் ராய்

திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்த முகுல் ராய், தனக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நம் நாட்டில் மிகவும் முக்கியமான நபர்களுக்கு இசட் பிளஸ், இசட் மற்றும் ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகள் என பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட நபரின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஆராய்ந்து அதற்கேற்ப பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பா.ஜ.க.விலிருந்து மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு தாவிய முகுல் ராய்க்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அமைச்சகம் வழங்கி வருகிறது.

எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. திரும்ப பெற்றுக்கோங்க.. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முகுல் ராய்
பா.ஜ.க.

2017ம் ஆண்டில் முகுல் ராய் பா.ஜ.க.வில் இணைந்தார். முகுல் ராய்க்கு முதலில் இசட் பிரிவு பாதுகாப்புதான் வழங்கப்பட்டது, கடந்த மார்ச் மாதத்தில்தான் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஒய் பிளஸாக உயர்த்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் முகுல் ராய் யாரும் எதிர்பாராத வண்ணம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. திரும்ப பெற்றுக்கோங்க.. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதிய முகுல் ராய்
மத்திய உள்துறை அமைச்சகம்

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த அடுத்த நாளில் (நேற்று), தனக்கு வழங்கப்பட்டுள்ள மத்திய பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முகுல் ராய் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக எந்தவித பதிலையும் தெரிவிக்கவில்லை.