கொரோனா அச்சம்- திருச்சி மொத்த மீன் மார்க்கெட் 10 நாட்கள் மூடல்… வெங்காய மண்டிக்கு விடுமுறை அறிவிப்பு!

 

கொரோனா அச்சம்- திருச்சி மொத்த மீன் மார்க்கெட் 10 நாட்கள் மூடல்… வெங்காய மண்டிக்கு விடுமுறை அறிவிப்பு!

திருச்சி

திருச்சியில் கொரோனா அச்சம் காரணமாக உறையூர் மீன் மார்க்கெட் இன்று முதல் 10 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், மொத்த வெங்காய மண்டிக்கும் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகும் நலையில், மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பி விட்டன. பொதுமுடக்கத்தின் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இறைச்சி கடைகளிலும், உறையூரில் உள்ள காசிவிளங்கி மீன் மார்க்கெட்டிலும் இறைச்சி வாங்குவதற்காக ஏராளமானோர் திறண்டதால் கொரோனா பரவும் அச்சம் நிலவி வந்தது.

கொரோனா அச்சம்- திருச்சி மொத்த மீன் மார்க்கெட் 10 நாட்கள் மூடல்… வெங்காய மண்டிக்கு விடுமுறை அறிவிப்பு!

இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மீன்கடை வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி, இன்று முதல் மே 30ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு உறையூர் மீன் மார்க்கெட்டில் மொத்த மீன் வியாபாரம் நடைபெறாது என திருச்சி மாவட்ட மொத்த மீன்வியார நல சங்கம் அறிவித்துள்ளது. மேலும், மொத்த வியாபாரிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மீன் வியாபாரம் செய்யக்கூடாது என்றும் முடிவெடுத்து உள்ளனர். இதனையடுத்து, உறையூர் மீன் மார்க்கெட் இன்று மூடப்பட்டது.

இதேபோல், கொரோனா பரவலையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி பால் பண்ணையில் செயல்பட்டு வந்த மொத்த வெங்காய மண்டி வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை5 நாட்கள் இயங்காது என வெங்காய மண்டி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.