அஸ்தியை கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு சென்றனர்!- சென்னை இளைஞர்களுக்கு நடந்த அதிர்ச்சி

 

அஸ்தியை கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு சென்றனர்!- சென்னை இளைஞர்களுக்கு நடந்த அதிர்ச்சி

உறவினரின் அஸ்தியை கரைக்க திருச்சி காவிரி ஆற்றுக்கு சென்னை இளைஞர்களின் நகைகள், பணம், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கீழ்கட்டளை பூபதிநகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், வைத்தியநாதன், வெங்கடேசன் ஆகியோரின் உறவினர் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். இவரின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரத்தில் கரைக்க மூன்று பேரும் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 12ம் தேதி சென்னையில் இருந்து கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டனர். போகும் வழியில் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்துள்ளனர். இதனால் அஸ்தியை திருச்சி காவிரி ஆற்றில் கரைக்க முடிவு செய்தனர். திருச்சியில் இறங்கிய அவர்கள், அம்மா மண்டபம் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த காவல்துறையின் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, 3 பேரும் காரில் ஜீயபுரம் அருகேயுள்ள முருங்கைப்பேட்டைப் பகுதிக்கு வந்தனர். அங்கு சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர். பின்னர் அஸ்தியை கரைத்துவிட்டு மூன்று பேரும் காரை வந்துள்ளனர். அப்போது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரில் இருந்த 15 பவுன் நகை, 20 வைரத் துண்டுகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் காணாமல் போய் இருந்தது. இது குறித்து 3 பேரும் ஜீயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

உறவினரின் அஸ்தியை கரைக்க சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற வாலிபர்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.