திருச்சி
தங்குமிடம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி திருச்சியில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுவது மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பறிப்பதாக எழுந்த புகாரின் பேரில், போலீசார் நேற்று இரவு திருநங்கைகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து, எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் இன்று காலை திருச்சி சமூகநலத் துறை அலுவலகத்திற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு மற்றும் தங்குமிடம் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வாறு செய்தால் தாங்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர். பின்னர், அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் மனு அளித்துவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சமூக நலத்துறை அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.