திருச்சி: போலியான கொரோனா முடிவுகள் வழங்கிய பரிசோதனை கூடத்துக்கு சீல்!

 

திருச்சி: போலியான கொரோனா முடிவுகள் வழங்கிய பரிசோதனை கூடத்துக்கு சீல்!

திருச்சியில் தவறான கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கியதாக தனியார் பரிசோதனைக் கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் என்ற தனியார் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் உள்ள முக்கிய மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வுக் கூடத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கு கொரோனா பரிசோதனைக்கு கொடுக்கப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவற்றுக்கு பாசிடிவ் என்று முடிவு வந்திருந்தது. மற்ற மருத்துவ ஆய்வுக் கூடங்களைக் காட்டிலும் இங்கு மட்டும் எப்படி அதிகப்படியான பாசிடிவ் வருகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியாக இவர்களாக பாசிடிவ் என்று ரிப்போர்ட் தயார் செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

திருச்சி: போலியான கொரோனா முடிவுகள் வழங்கிய பரிசோதனை கூடத்துக்கு சீல்!
இதைத் தொடர்ந்து இந்த பரிசோதனைக் கூடத்தை மூட உத்தரவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஊழியர்கள், பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு சீல் வைக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

திருச்சி: போலியான கொரோனா முடிவுகள் வழங்கிய பரிசோதனை கூடத்துக்கு சீல்!இந்த டயக்னோஸ்டிக் சென்டரில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று முறைகேடு நடந்தது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வைரலாக பரவிய நேரத்தில் இந்த ஆய்வுக் கூடம் பரிசோதனைக்கு வரும் பெரும்பாலானவர்களுக்கு பாசிடிவ் என்று ரிப்போர்ட் கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்போதும் இந்த பரிசோதனைக் கூடம் மூடப்பட்டது. மீண்டும் கொரோனா காலத்தில் இந்த ஆய்வகம் சிக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிறுவனத்துக்கு அதிகாரிகள் எப்படி கொரோனா பரிசோதனை செய்யும் அனுமதியை வழங்கினார்கள், இந்த ஆய்வுக் கூடத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் யார் யார், பாசிடிவ் என்று ரிப்போர்ட் கொடுத்து பணம் பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்டார்களா என்று தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்தள்ளனர்.