திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து!

 

திருச்சி மலைக்கோட்டை  தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து!

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிமையாக நடைபெறுவது வழக்கம். கொடியேற்றம் துவங்கி, ஒரு வார காலம் நடைபெறம் இந்த திருவிழாவில் செட்டிப் பெண் மருத்துவம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்கிகள் நடைபெறும்.

திருச்சி மலைக்கோட்டை  தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா ரத்து!

கொரோனா ஊரடங்கினால், கடந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்தான நிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்தப்படும் என பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடப்பு ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து செய்யப் படுவதாக கோவில் இணை ஆணையர் விஜயராணி அறிவித்து உள்ளார்.

மேலும், இன்று புத்தாண்டை ஒட்டி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் எந்த வித சிறப்பு பூஜைகளும் நடைபெறாது என்றும், கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்