• December
    12
    Thursday

Main Area

Main



திருச்சி மாணவர்கள் உலக சாதனை

trichystudents
trichystudents

திருச்சி: 1 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் 200 மாணவர்கள் சுகாசனம் செய்வதில் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள விவேகானந்தர மெட்ரிக் தனியார் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 9ஆம்வகுப்பு வரையுள்ள 200 மாணவ மாணவிகள்இரு கைகளிலும் பூக்களை வைத்துக்கொண்டு சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு 21 நிமிடம் செய்து சாதனை புரிந்தார்கள். 

இந்த ஆசனத்தை மலர் ஆசனம் என்று கூறுவார்கள். இதைச்  செய்யும்போது மனதை ஒருநிலைப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்க முடியும் என்பதாலே இந்த ஆசனத்தில் அமர்ந்து சாதனை முயற்சி மேற்கொண்டனர்.

trichystudents

இந்த சாதனை முயற்சியில் பங்கேற்ற இப்பள்ளியைச் சேர்ந்த 200 மாணவ மாணவிகளும், சிறப்பாக சுகாசனம் செய்து உலக சாதனையை படைத்துள்ளனர்.

இந்தச் சாதனையை படைத்த அனைவருக்கும் 'பதாஞ்சலி புக் ஆப் வேல்ட் ரிக்கார்டு' நிறுவனர் கிருஷ்ணகுமார் அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

2018 TopTamilNews. All rights reserved.