ஶ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு, கொரோனா பாதிப்பு!

 

ஶ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு, கொரோனா பாதிப்பு!

திருச்சி

திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, சமீப நாட்களாக 100-க்கும் மேலாக அதிகரித்து உள்ளது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாவட்டத்தில் புதிதாக 150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது.

ஶ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு, கொரோனா பாதிப்பு!

இதில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருச்சி ஶ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் 14 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, தொற்றுக்கு உள்ளானவர்களை அவரவர் வீடுகளிலேயே, மாநகராட்சி அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாயில் இரும்பு தகடுகளால் அடைத்த, மாநகராட்சி ஊழியர்கள், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் ஶ்ரீரங்கம் பகுதியில் பரபரபை ஏற்படுத்தி உள்ளது.