திருச்சி ரவுடி கொலை வழக்கில், 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!

 

திருச்சி ரவுடி கொலை வழக்கில், 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!

கரூர்

திருச்சியில் ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர், இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பன்னி பெரியசாமி. இவரது சகோதரர் கேபிள் சேகர். சொத்து பிரச்சினை தொடர்பாக இரு குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு கேபிள் சேகரை அவரது வீட்டின் அருகே வைத்து மர்மநபர்கள் படுகொலை செய்தனர்.

இந்த வழக்கில் பெரியசாமியின் மனைவி, மகன் சிலம்பரசன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் பெரிசாமியின் மகன் சிலம்பரசன் அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்படடார்.

திருச்சி ரவுடி கொலை வழக்கில், 4 பேர் நீதிமன்றத்தில் சரண்!

இதுகுறித்து, அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய திருச்சி மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(28), சரவணன் மற்றும் அரியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித், கோபிநாத் ஆகியோர் நேற்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.