திருச்சி- வரத்து குறைந்ததால் கிடுகிடு என உயரும் வெங்காய விலை

 

திருச்சி- வரத்து குறைந்ததால் கிடுகிடு என உயரும் வெங்காய விலை

திருச்சி

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வரத்து குறைந்ததால், திருச்சியில் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. திருச்சி மொத்த வியாபார வெங்காய மண்டியில் இன்று சின்ன வெங்காயம் முதல் ரகம் கிலோ 110 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 80 ரூபாய்க்கும் விற்பனை

திருச்சி- வரத்து குறைந்ததால் கிடுகிடு என உயரும் வெங்காய விலை

செய்யப்படுகிறது. அதேபோல் பல்லாரி பெரிய வெங்காயம் முதல் ரகம் கிலோ 72 ரூபாய்க்கும், 2ஆம் ரகம் கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது கடந்த வாரத்தை விட சின்ன வெங்காயத்தின் விலை 30 ரூபாயும், பெரிய வெங்காயத்தின் விலை 20 ரூபாயும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி- வரத்து குறைந்ததால் கிடுகிடு என உயரும் வெங்காய விலை

இதுகுறித்து பேசிய வியாபாரிகள், திருச்சி மொத்த வெங்காய மண்டிக்கு நாள்தோறும் 15 டன் வெங்காயம் வந்துகொண்டிருந்த நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய வரத்து 3 டன்களாக குறைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தமிழகத்தில் பயிரிடப்படும் சின்ன வெங்காயங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விலை நிலையத்திலேயே

திருச்சி- வரத்து குறைந்ததால் கிடுகிடு என உயரும் வெங்காய விலை

அழுகி விடுவதாகவும் தெரிவித்தனர். வெங்காயம் வரத்து குறைவாக உள்ளதால், விலை அதிகரித்து வருவதாக கூறிய வியாபாரிகள், இன்னும் 2 மாதத்திற்கு விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், எகிப்தில் இருந்து வரும் பல்லாரி வெங்காயத்தை இறக்குமதி செய்தால் விலை குறையும் என்று கூறிய வியாபாரிகள், ஆனால் அதை வாங்க மக்களும், சிறு வியாபாரிகளும் தயக்கம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.