போஸ்டர் சர்ச்சை – காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக புகார்

 

போஸ்டர் சர்ச்சை – காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக புகார்

திருச்சி

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவமதிக்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. 2021 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமியும், திமுக கூட்டணி சார்பில் ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளராக அறிவித்து, இருகட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போஸ்டர் சர்ச்சை – காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக புகார்

இந்நிலையில், திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும், திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாகவும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், தன்னம்பிக்கை மிக்க தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துண்டுச்சீட்டு தலைமையா? என ஸ்டாலினையும் குறிப்பிட்டும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு சுவரொட்டியில், உழைப்பை நம்பலாமா? என முதல்வரையும், பிறப்பை நம்பலாமா? ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. அதிமுகவிற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட

போஸ்டர் சர்ச்சை – காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக புகார்

போதிலும், இதனை ஒட்டியவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாததால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக வழக்கறிஞர் அணி சார்பில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.