திருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி

திருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில்  தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி

திருச்சி

திருச்சியில் தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி, கைதுசெய்தனர்.பட்டியல் இனத்தை சேர்ந்த 7 உட்பிரிவுகளை, தேவந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்கும் தமிழக அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று திருச்சியில் வ.உ.சி பேரவை அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில்  தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில்  தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி

இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்ற முற்பட்டனர். அப்போது , இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் வீசிய மதுபாட்டில் பட்டு காவலர் ஒருவர் காயமடைந்தார்.

திருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில்  தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி

இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், பின்னர் அவர்களை கைதுசெய்து அழைத்துச்சென்றனர். தடியடி காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.